news Breaking News
clock

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!


 

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் 4 நிலவுகள் வானில் தென்பட்டன.


இதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.


மொத்தமுள்ள 8 கோள்களில் புதன் (மெர்குரி) மற்றும் வியாழன் (வெள்ளி) கோள்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிலவுகள் உள்ளன. அதிகபட்சமாக சனி (சாட்டர்ன்) மற்றும் வியாழன் (ஜூப்பிடர்) கோள்களில் 100-க்கும் அதிகமான நிலவுகள் உள்ளன.


பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மட்டும் 4 நிலவுகள் ஒரே நேரத்தில் வானில் தென்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதனை மாயத்தோற்றம் (Optical Illusion) என்று வானிலை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு பாரசெலீன் (Paraselene) அல்லது மூன் டாக் (Moon Dog) என்று அழைக்கப்படுகிறது.


இந்த பாரசெலீன் நிகழ்வு ஒரு அரிய வானிலை நிகழ்வாகும். பூமியில் இருந்து 20,000 அடி உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகளால் உருவாகும் சிரஸ் மேகக் கூட்டங்கள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் ஒளிவிலகலால் இதுபோன்ற போலி நிலவுகள் உருவாவதாக வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News