ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு


ஆற்​காடு: ராணிப்​பேட்டை மாவட்​டம் கலவை அருகே நீரில் மூழ்கி சகோ​தரி​கள் உள்​ளிட்ட 3 சிறுமிகள் உயி​ரிழந்​தனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் கலவை வட்​டம் ஆரூர் கிராமம் பொன்​னி​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் அசோகன் (36). தொழிலா​ளி.


இவரது மூத்த மகள் யுவ (13), இளைய மகள் பிரி​யங்கா (12). அப்​பகு​தி​யில் உள்ள ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் யுவ 8-ம் வகுப்​பும், பிரி​யங்கா 6-ம் வகுப்​பும் படித்து வந்​தனர்.


யுவ​யின் தோழி​யான அப்​பகு​தி​யைச் சேர்ந்த வெங்​கடேசன் என்​பவரது மகள் பிரி​யா(13), அப்​பகு​தி​யில் உள்ள ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார்.


இந்​நிலை​யில், யுவ, பிரி​யங்​கா, பிரியா ஆகியோர் அப்​பகு​தி​யில் உள்ள கிணற்​றில் நேற்று துணி துவைக்​கச் சென்​றுள்​ளனர். அப்​போது, கிணற்​றில் இறங்​கிய 3 சிறுமிகளும் அடுத்​தடுத்து நீரில் தவறி​விழுந்து மூழ்​கினர். அவர்​களது அலறல் சப்​தம் கேட்டு வந்த அக்​கம்​பக்​கத்​தினர் மூவரை​யும் மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.


எனினும், சிறுமிகளை மீட்க முடிய​வில்​லை. தகவலறிந்து வந்த கலவை போலீ​ஸார் மற்​றும் தீயணைப்​புத் துறை​யினர் கிணற்​றில் இறங்​கி, நீரில் மூழ்கி உயி​ரிழந்த 3 சிறுமிகளின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கலவை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.


மேலும், இதுகுறித்து வழக்​கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். கிணற்​றில் மூழ்கி 3 சிறுமிகள் உயி​ரிழந்த சம்​பவம் அப்​பகுதி மக்​களைச் சோகத்​தில்​ ஆழ்த்தி​உள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%