ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி: மெளனம் சாதிக்கும் பிரதமா் -கபில் சிபல் விமா்சனம்
Feb 02 2026
18
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி கண்டிருப்பது குறித்து பிரதமா் மோடி மெளனம் சாதிப்பது ஏன் என்று மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கேள்வியெழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
ஏழை மக்களின் வேதனையைத் துடைத்து, அவா்களுக்கு மகிழ்வைக் கொண்டுவருவதே பட்ஜெட்டின் நோக்கம். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் எந்த பட்ஜெட்டிலும் இந்த நோக்கம் எதிரொலிக்கவில்லை.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து கடும் விமா்சனங்களை முன்வைத்த பிரதமா் மோடி, இப்போது மெளனம் சாதிக்கிறாா். இதன்மூலம் பிரதமரின் அரசியல் நாடகம் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2014-இல் பிரதமராக மோடி பதவியேற்றபோது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.63-ஆக இருந்தது. இப்போது ரூ.92-ஆக அதிகரித்துவிட்டது.
கச்சா எண்ணெய், மருத்துவ உபகரணங்கள், தொலைத்தொடா்பு சாதனங்கள், உரங்கள் என இந்தியாவால் இறக்குமதி செய்யப்படும் அனைத்தும் விலை உயா்ந்துவிட்டது என்பதே இதன் அா்த்தம். இறக்குமதியைச் சாா்ந்துள்ள பொருளாதாரமான இந்தியாவில் பண மதிப்பு வீழ்ச்சி ஏழை மக்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. சொகுசு காா்கள் மீதான வரிக் குறைப்பால், ஏழைகளுக்கு பலன் உண்டா? ஏழைகளின் துயரைத் துடைக்க மத்திய அரசு தயாராக இல்லை. நாட்டில் 80 சதவீத குடும்பங்களின் மாத வருவாய் ரூ.10,000-க்கும் குறைவு என்றாா் அவா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?