வசந்தி கேட்ட கேள்வி !

வசந்தி கேட்ட கேள்வி !



வி.கே.லக்ஷ்மிநாராயணன்

22,22 ஏ,ராமகிருஷ்ணா நகர்

மெயின் ரோடு,

போருர், சென்னை 600 116



"மிஸஸ் வசந்தி ! கங்கிராட்ஸ் ! நீங்க அம்மாவாகப் போறீங்க.." 


டாக்டர் சொன்னதும் பெஞ்ச்மீது படுத்திருந்த வசந்தி சந்தோஷப் படப்படப்போடுஎழுந்து உடகார்ந்தாள். இதுநாள்வரை அவள் மனத்தில் அடைத்துக்கொண்டிருந்த வேதனை சட்டென விலகிப்போனது.


" தேங்க் யு டாக்டர் ! " டாக்டர் கையைப் பற்றியவாறு நெகிழ்ச்சியுடன் கூறி னாள்.


" இட்ஸ் ஓ.கே.!" என்ற டாக்டர் இருக்கையில்அமர்ந்துகொண்டிருந்த வசந்தியின் மாமியார் கமலத்திடம் விஷயம் கூற, கேட்ட கமலம் பூரிப்ப டைந்தார்.


" ரொம்ப நன்றி டாக்டர் ! ஒரு வரு ஷமா ரெண்டு வருஷமா, ஆறுவரு ஷமா வேதனைப்பட்டுக்கிட்டிருந்தா வசந்தி. ஏதோ பகவான் இப்போதா வது கண் திறந்தானே !" 


" வசந்தி கொஞ்சம் வீக்கா இருக்கா ங்க. வைட்டமின் மாத்திரையும் டானி க்கும் எழுதித் தரேன். வேளை தவறா மல் சாப்பிடட்டும். ரெண்டுமாதம் கழித்து செக்கப்புக்கு வந்தால் போதும் !


டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திரை மற்றும் டானிக்கும் வாங்கிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.


மலடி மலடி என்று வையகம் பேசுகிற தோ இல்லையோ நிச்சயம் அக்கம்ப க்கத்தினர் பேசவே செய்தனர். அரசல் புரசலாக இது காதில் விழ துடித்துப் போனாள் வசந்தி. வசந்தி நிலைமை கண்டு விசனமுற்றார் கமலம். ஊர் பேசுவதை அசட்டை செய்யும்படி மருமகளிடம் கூறினார் கமலம்.


நல்லவேளையாக நல்ல அருமை யானமாமியார் கிடைத்தார். சொந்த மகளைப்போல் தன் உள்ளம்கையில் தாங்கும் இவரைப்போல் வேறு ஒரு வர் கிடைப்பதுகஷ்டம் என எண்ணி மனத்துக்குள் சமாதானமடைவாள் வசந்தி.


வீட்டை அடைந்ததும் பெங்களூரு டூர் சென்றிருக்கும் கணவனை மொபை லில் தொடர்பு கொண்டாள் வசந்தி.


" என்னங்க ! உங்களுக்கொரு சந்தோஷமான சமாச்சாரம்ங்க !"


" இதோபார்..நான் மீட்டிங்குல இருக் கேன். சட்டுப் புட்டுன்னு விஷயம் என்னன்னு சொல்லித் தொலை !" மறுமுனையில் கணவன் மகேஷ் சிடு சிடுத்தான்.


வசந்தியின் ஆர்வம் குன்றிப்போனது.

விஷயம் என்னன்னு ஆவலாகஇல்லா

மல் இப்படி கோபப் படுகிறானே என

வேதனையுற்றாள்.


மெல்ல வாய்திறந்தாள். " கொஞ்சநே

ரம் முன்னால நாள் தள்ளிப்போயிருக்

குன்னு டாக்டர் கிட்ட செக்கப்புக்கு போயிருந்தேன். நான் உண்டாகியி ருக்கறதா டாக்டர் கன்ஃபர்ம்டா சொன் னாங்க. நீங்க அப்பா ஆகப்போற விஷயத்தை உங்களுக்கு உடனே சொல்லணும்னு ஆசை . அதனால தாங்க போன் பண்ணினேன்." 


மறுமுனையில் சில வினாடிகள் மௌனம் பிறகு வாய் திறந்தான் மகேஷ். ":ஓ.கே.சந்தோஷம். மற்றத நாளைக்கு நான் வீடு திரும்பின உடனே பேசிக்கலாம்." தொடர்பை மகேஷ் துண்டித்துவிட துவண்டு

போனாள் வசந்தி.


' சே ! எவ்வளவு பெரிய உன்னதமான விஷயம் ! ஒரு ரியாக்ஷ்னும் இல்லா மல் தன் புருஷன் இருக்கிறானே என கோபம் கொண்டாள் வசந்தி.


ஆனால் மகேஷின் திட்டமே வேறு ! தாய்மைப் பேறு அடையாமலிருக்கும் வசந்தியைத் தள்ளிவைத்துவிட்டு வேறு ஒருத்தியை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ! சமயம் பார்த்து இதைச் சாதித்து விடத் துடித்தான். ஆனால் இப்பொழுது

தன் செயலுக்கு ஒரு முட்டுக்கட்டை போடும்படியாக வசந்தி செய்து விட்டது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது மகேஷூக்கு.


மறுநாள் இரவு வீடு வந்து சேர்ந்தான்

மகேஷ். அவன் வருவதற்கு முன்னா டியே கமலம் டின்னரை முடித்துக் கொண்டு படுக்கச் சென்றார்.


மகேஷூம் வெளியிலேயே டிஃபனை

முடித்துக்கொண்டதால் டிரெஸ் மாற்றி

கை கால் அலம்பிக்கொண்டு அறை க்குள் புகுந்தான். அவன் பின்னாடியே வசந்தியும் சென்றாள். கட்டிலில் படுத்துக்கொண்ட புருஷன் எதிரில் போய் நின்றாள்வசந்தி. கோபத்துடன் முறைத்தாள்.


" என்னங்க ! நேத்து நான் பேசின போது நீங்க பிடி கொடுத்து பேசல்ல. சரி. இன்னிக்காவது பேசுவீங்கன்னு நெனைச்சேன். ஆனா எதுவும் பேசாம இப்படி வந்து படுத்தால் என்ன அர்த் தம் ? நான் கன்ஸீவ் ஆனது உங்களு க்கு விருப்ப மில்லையா சொல்லு ங்க !" குரலில் ஆக்ரோஷம் வழிந்தோ டியது !


" இதோபாரு ! எதுக்கு நீ இப்படி ஆர்ப்பாட்டம் பண்றே ?" என்றவன் தொடர்ந்தான்." நீ கல்யாணமாகி மறுவருஷமோ இல்லஅதுக்கடுத்த வருஷமோ கன்ஸீவ் ஆகியிருந்தால் தேவலை. அது இரட்டிப்பு சந்தோஷமா இருந்திருக்கும். ஆனால் ஆறுவரு ஷம் கழிச்சு இவ்வளவு லேட்டா கன்ஸீவ்ஆகியிருக்கே. இதுல என்ன பெருமைவேண்டிக்கிடக்கு...சொல்லு !" 


" ஓஹோ !"ஆறுவருஷம் கழிச்சு கன்ஸீவ் ஆனால் சந்தோஷமோ இல்லை பெருமையோப் படக்கூ டாதா....சரி. நான் ஒரு கேள்வி கேட்குறேன். " 


மகேஷ் விறைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க வசந்தி தொடர்ந்தாள்.


" தாமதத்துக்கு நான் மட்டும்தான் கார

ணமா ?" 


சுரீரென்று சவுக்கடிகளாக வார்த்தை கள்வந்து தாக்க விருட்டென்று எழுந்து உட்கார்ந்தான் மகேஷ். அவனுக்குள் ஒரு பெரிய ரசாயன மாற்றமே நிகழ் ந்தது ! 


" ஸாரிங்க ! என்னை மன்னிச்சிடுங்க. உங்களை குத்திக் காட்டணும்னு என்

னுடைய நோக்கம் கிடையாது. நிலையை புரிஞ்சுக்கிட்டு நடந்துக்கு ங்கன்னு சொல்ல வரேன் ." என கூறிவிட்டு பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டாள் வசந்தி.

              ..................................

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%