வண்ணம் பெருக்கி வளம் பெறுவோம்

வண்ணம் பெருக்கி வளம் பெறுவோம்


இங்கு வண்ணம் என்பது பசுமையை

குறிக்கிறது!


மரம் செடி கொடிகள்‌ செழித்தால்

வண்ணமயமே!


பூமியின் வெப்பத்தை குறைக்கும் 

இயற்கை அழகோ வனம்!


காடு வளர்த்தால்

மழைப்பொழிவு சீராக‌ இருக்கும்!



இது விவசாயத்தை மேம்படுத்தும்!



உயிரினங்கள், பறவைகள், மலர்கள் வண்ணமாக‌ காணப்படும்!



மனித குலம் நீடிக்க வாழ்வளிக்கும்!




மனநலம், மகிழ்ச்சி இயற்கையானது

மனிதர்களின் மன‌அழுத்தத்தை‌ குறைக்கும்!





மழையைத் தந்து மண்ணைக் காக்கும் 

உயிரின் மூச்சாய் காடு!


நிழல் தரும் மரங்கள் நீரோடை சத்தம்!


ஆயிரம் உயிர்கள் வாழும் தளம் அன்னை இயற்கையின் அதிசயக்களம்!


வன விலங்குகளும் பறவைகளும் பாதுகாப்பு புகலிடம்!


மரங்கள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி நாம் சுவாசிக்க தேவையான

ஆக்சிஜனை வழங்குகிறது!


வேர்கள் மண்ணை பிடித்து கொள்வதால் மண் அரிப்பை தடுக்கும்!


மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்!

காடு அழித்தால் நாடு அழியும்!


வருங்கால தலைமுறைக்கு நாம் தரும் 

சொத்து பசுமை மட்டுமே!


வண்ணம் பெருக்கி வளம் பெறுவோம்

!

மரம் வளர்க்கவேண்டும் நீர்நிலைகளை பாதுகாப்போம்!


சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்!


இந்த செயல்பாடு மூலம் பூமி வண்ணமயமாக மாறும்!


தானாகவே ஆரோக்கியம் ‌அமைதி செல்வம் ஆகிய வளங்கள் நம்மை வந்து சேரும்!



பெ.திருமுகம்

மணமேல்குடி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%