வந்தவாசியில் உலக தாய்ப்பால் வார விழா..

வந்தவாசியில் உலக தாய்ப்பால் வார விழா..


வந்தவாசி, ஆக 02:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பக்கீர் தக்கா பகுதி அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சமூக ஆர்வலர் ஜா.தமீம் தலைமை தாங்கினார். அங்கன்வாடி மைய ஆசிரியை அ.மொபீனா வரவேற்றார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், மேற்பார்வையாளர் ரா.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் அ.செண்பகவல்லி, மருத்துவர் கா.தாரினி ஆகியோர் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், ஊட்டச்சத்து பொருட்களின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தி பேசினர். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு.சதானந்தன், பாரத் வித்யாலயா பள்ளி தாளாளர் எஸ். காசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பெற்றோர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இறுதியில் அங்கன்வாடி உதவியாளர் ஆஜிரா நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%