
வந்தவாசி, செப் 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனைக் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நேற்று பாலாலய வைபவம் யாகசாலை பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் பட்டாச்சார்யாக்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவைகளை நடத்தி பாலாலய வைபவத்தை நடத்தினர். மேலும் இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%