வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சி புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 675 மனுக்கள் பெறப்பட்டன
Aug 22 2025
92
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சி புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் விருப்பாச்சி புரம், ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், பாடகச்சேரி, தொழவூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் உடனடி தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டமாகும். இதில் மேற்கண்ட ஊராட்சி பொதுமக்களிடம் இருந்து 675 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 205 மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி வரப்பட்ட மனுக்கள் ஆகும். முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அருண்சத்யா பார்வையிட்டு பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, புதிய குடும்ப அட்டை, வேளாண்மை இடுபொருள்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வலங்கைமான் தாசில்தார் ஓம் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார், வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ. அன்பரசன் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?