வாக்காளர் உறுதி ஏற்பு நிகழ்ச்சி

வாக்காளர் உறுதி ஏற்பு நிகழ்ச்சி

ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


கல்லூரி முதல்வர் (பொறுப்பு ) மற்றும் நிருவாகவியல் துறைத்தலைவருமான முனைவர் மு.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார். 


தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கா.காளிதாஸ், ஆங்கிலத்துறைத்தலைவர் பேராசிரியர் அ. கணேசன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு. சீனிவாசன், கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் பா.கிளாடிஸ், வேதியியல் துறைத்தலைவர் து. சிற்றரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், கல்லூரிக்கண்காணிப்பாளர் பா.மகாராஜன் உள்ளிட்ட அலுவலகப்பணியாளர்கள் , நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட மாணவ மாணவியர் பலரும் பங்கேற்றனர். 


கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு. பழனித்துரை, உறுதிமொழியை வாசித்தளிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%