வாசகர் கடிதம் (இராம.வேதநாயகம்) 29.10.25.

வாசகர் கடிதம் (இராம.வேதநாயகம்) 29.10.25.


தக்க விடியல் நேரம்

தகுந்த செய்தி கூறும்

மிக்க கவிதை மணக்கும்

மேன்மை யாக இனிக்கும்!

திக்கு எட்டின் செய்தி

தேர்ந்து தருமே நெய்து

பக்கு வமான பேப்பர்

படிக்கும் த.நா.இ.பேப்பர்!


அரசுத் தகவல் உண்டு

அன்பாய்த் திரையும் கண்டு

முரசு கொட்டும் கருத்து

மேன்மை யாக நிறையும்!

விரைவாய்ச் செய்தி வரவு

வேண்டும் நட்பு உறவு

ஒருங்குக் கூடி அழைக்கும்

ஒன்று பட்டே உழைக்கும்!


பலவாய்த் துறைகள் நாடி

பாங்காய்க் காணும் தேடி

கலைகள் உண்டு ஆங்கே

காட்சி உண்டு பாங்காய்!

மலையே ஒத்த பண்பு

மாண்பாய் இதிலே உண்டு

தலைமைப் பேப்பர் இஃதே

*த.நா.இ.* பேப்பர் வாழி!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%