அன்புடையீர்
வணக்கம் 3.8. 25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் அவர்களின் திட்டம் தொடங்கியது நல்ல செய்தி மனமார்ந்த பாராட்டுக்கள் இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மிக்க நன்றி..
339-ம் திருக்குறளையும் அதன் பொருளையும் படித்து மிகவும் மகிழ்ந்தேன். நல்லூர் பெருமாள் கோவிலில் 108 சுமங்கலி பூஜை என்ற செய்தி பார்ப்பதற்கே அருமையாக இருந்தது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். உக்கல் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மிகவும் வருத்தமான செய்தி பாராட்டுக்கள்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வைட்டமின் டி நிறைந்த சிறந்த பத்து உணவுகளை பற்றிய பட்டியலிட்டு காட்டியது மிகவும் அருமை ஒரு மருத்துவரிடம் சென்று பேசியது போல மன மகிழ்ச்சியாக இருந்தது. சார்மினார் ரயில் டிசம்பர் 31 வரை கடற்கரையிலிருந்து இயங்கும் என்ற செய்தி பயணம் செய்பவருக்கு நல்ல தகவல் பாராட்டுக்கள்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பழைய முறையிலேயே பணம் பட்டுவாடா தொடர வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை செய்தது அவர்களுடைய எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்ற செய்தி பலரும் விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருப்பதை காட்டியது. பாராட்டுக்கள்.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் சரோஜினி நாயுடு பற்றியும் அவருடைய வரலாறும் மிகவும் அருமை. நல்ல தலைவர்களை மிக அழகாக சொல்லி வரலாற்றுச் செய்திகளை புதுமையாக பிரசூரிக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
பல்சுவை கலைஞ்சியம் பகுதியில் மஹா பெரியவர் அவர்களின் அருள்வாக்கு மிகவும் அருமை மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஜோக்ஸ் பலமுறை படித்து ரசித்து சிரிக்க வைத்தது.
ஜோதிடம் அறிவோம் பகுதியில் கைரேகை அழைத்த இறைவன் சாக்கியரின் கல் எறிதல் வழிபாடு நல்ல அருமையான கதையுடன் சொன்னது மிகவும் அருமை. பாராட்டுக்கள். நாயன்மார்கள் குருபூஜை நல்ல செய்தி .
ஆழ்வார் திருநகரில் ஸ்ரீ பசஷிராஜ திரு ஆதீஸ்வாதி பத்தாம் நாள் திருநாள் ஆதி ஸ்வாதி பால் திருமஞ்சன சேவை என்ற செய்திகள் எல்லாம் அந்தந்த கோவில்களுக்கு சென்று பார்ப்பது போல மிக அருமையாக இருந்தது. நூல் வெளியீட்டு விழா நல்ல தகவல் பாராட்டுக்கள் .
சுற்றுலா பகுதியில் பழனி மலையில் அழகாக மாறும் செயற்கை அருவி என்ற செய்தி புதுமையான தகவல். பழனிக்கு செல்லும் போது இதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. ராசிபலன் மிகவும் மிக அருமை இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
அனில் அம்பானி அவர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் கொடுத்து செய்தி படித்து தெரிந்து கொண்டேன் விளையாட்டு செய்திகள் மிகவும் அருமை.
ரஷ்ய உறவு பாதிக்கப்படாதே, இந்தியா திட்டம் என்ற செய்தி அயல்நாட்டில் நடப்பதை அழகாக சொல்லியது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா இனி எரி பொருள் வாங்காது என கேள்விப்பட்டேன் அது நல்லது என்று டிரம்ப் அவர்கள் சொன்னது அதிர்ச்சியான தகவலாக இருந்தது.
ஞாயிறு என்றால் கூட விடுமுறை இல்லாமல் மிக அழகான செய்திகளை விடியலிலேயே எங்களுக்கு தரும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் பணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்