வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 06.09.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்) 06.09.25


அன்புடையீர்,


 வணக்கம். 6. 9. 2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் திரௌபதி முர்மு அவர்கள் 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கியதை பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக நல்ல நாளாக அமைய எனக்கு உதவியது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


இன்றைய திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மன மகிழ்ச்சியுடன் மனநிறையுடன் மனதில் ஏற்றுக் கொண்டேன். காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருவோண சிரவண தீபம் ஏற்றி வழிபாடு என்ற செய்தி பக்தி மார்க்கத்தில் என்னை அழைத்துச் சென்றது.


வெள்ளை உணவுகள் எல்லாமே நம் உடலுக்கு கெடுதலா என்று என்ற இந்த கேள்வி பலமுறை என் மனதுக்குள் எழுந்ததுண்டு. அந்த வினாவிற்கு விடை அளிப்பது போல நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த தகவல் மிக அருமையாக இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள். வரிவிதிப்பு முறைகேடு வழக்கு மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளி வைப்பு என்ற செய்தி மதுரையில் நடக்கும் செய்தியை மிக தெளிவாக சொன்னது .


20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை என்று புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று சொன்னது அவர்களுடைய அனுபவத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் ஜிஎஸ்டி 2 எடப்பாடி பழனிசாமி அவர்களின் வரவேற்பு பற்றிய செய்தி மிகவும் அருமை பாராட்டுக்கள்.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பசந்த குமார் பிஸ்வாஸௌ அவர்களின் வரலாறும் புகைப்படம் அருமையான தகவலாக இருந்ததால் மனது நிறைவுடன் படித்து முடித்தேன்.


வித்தியாசமான வகையில் வாசகர் கடிதத்தை வண்ணங்களில் படித்தவுடன் மனதுக்குள் எண்ண சிறகு அடித்தது மிகவும் அருமையான வடிவமைப்பில் இருந்தது பாராட்டுக்கள்.


பல்சுவை களஞ்சியம் பகுதி வழக்கம்போல் கலகலவென்று படிப்பதற்கு ரசனையாகவும் ருசியாகவும் இருந்தது மீம்ஸ் மிகவும் அருமை பலமுறை படித்து ரசித்தேன்.


வாழ்வு தரும் ஆரோக்கியம் பக்கத்தில் வந்த அனைத்து தகவல்களும் மிகவும் அருமை. அதிலும் உப்பு உடலுக்கு ஆபத்தா என்ற செய்தி இன்றைய அனைவரும் படிக்க வேண்டிய தரமான அருமையான செய்தி பாராட்டுக்கள்.


சிறப்பு அலங்காரத்துடன் மிகவும் அருமையாக காட்சியளித்த ஸ்ரீ பட்டாளம்மன் என்ற அம்மனின் உருவத்தை பார்த்தவுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நான் போய் விட்டேன். மிகவும் அற்புதமான ஆன்மீக தகவல்களை மிக அழகாகவும் படங்களுடனும் கொடுத்து எங்களை ஆன்மீகப் பாதையில் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


சுற்றுலா பக்கத்தில் வந்த என்னது இத்தனை வகையான பயணங்கள் என்று அருமையான தகவல்களை படித்தவுடன் இப்படி எல்லாம் கூட பயணம் செய்யலாம் என்று மனதுக்குள் ஒரு தெளிவும் வந்தது.


தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு என்ற செய்தி மிகவும் அருமை. இதனால் திருப்பதி செல்பவர்கள் அந்த தேவஸ்தான மருத்து வமனையில் சேவை செய்து கடவுளின் ஆசியைப் பெறலாம் .


வான் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கொள்முதல் இந்தியா - ரஷ்யா பேச்சு வார்த்தை என்ற செய்தி புதுடெல்லியில் நடக்கும் அந்த சம்பவத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.


காரில் பிரதமர் மோடிஜி அவர்களுடன் பேசியது என்ன என்று ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் சொன்னது அரசியலை நன்றாக படம் பிடித்துக் காட்டியது. பாரம்பரிய ரயிலில் சீனா சென்ற கிம் ஜோங் என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது.


சனிக்கிழமை விடியலை சந்தோஷ விடியலாக அமைய கையில் நல்ல அருமையான செய்திகளை தொகுத்துக் கொடுத்த தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி

 உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%