வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் ) 06.09 25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் ) 06.09 25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தாரின் தொடர் உழைப்பும் படைப்பாளர், வாசகர்கள் மீதான நிபந்தனை யில்லா நேசம், 'எண்ணித் துணிக கருமம்...' குறள் 

வழி நின்று செயல் புரியும் செம்மை நெறி 

... போன்ற சிறப்பியல்புகள், நம் சிந்தை கவர்கின்றன.

கூடவே வாழ்க்கைப் பாடங்களாகின்றன.


கடந்த சில வாரங்களாக வாசகர் கடிதம் பகுதியில் திருவாளர்கள் தென்காசி வெங்கடாசலபதி,

கோவை சிவசங்கர் இருவரும் மாறி மாறி 

தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் புதிய ஆன்மிக வெளியீடான 

தெய்வம் இதழுக்கு 

( மாதமிருமுறை)

சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அற வழி நின்று வரிந்து கட்டிக் கொண்டு வற்புறுத்தி 

வாசகர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் முயற்சி எடுத்தது 

உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

மெச்சத்தக்கது.


தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் ஆகுங்கள் என்று வெறுமனே சொல்லி யிருந்தால்,

அது சாதாரண நிகழ்வாக -- நடைமுறையாகத் தான் கருதப் பட்டிருக்கும்.

ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து இணைந்து, ஒரு பண்பாட்டு தளத்தில் நின்று ஒரு உயரிய குறிக்கோள் நிமித்தம் 

குரல் கொடுத்தது தான் இங்கே முக்கியம் பெறுகிறது.கவனத்துக்கு உள்ளாகிறது. எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

எல்லோரையும் காரிய களத்தில் இறங்கும் உத்வேகத்தை உண்டு பண்ணவும் செய்திருக்கிறது.


தரமான ஒரு புதிய பத்திரிகைக்கு வாசகர்களே இணைந்து நின்று 

அதன் சர்குலேஷனை 

உயர்த்திக் காட்டி உன்னதமான செயலுக்கு முன் உதாரணமாக ஆகியே தீர வேண்டும் என்று 

முழு மூச்சுடன் அவர்கள் தொடர்ந்து 

இயங்கிக் கொண்டிருப்பது ஆக்கப்பூர்வமான வித்யாச முயற்சி.

ஆழ்ந்து யோசித்தால் 

இது அபூர்வமான சிந்தனையில் விளைந்திருக்கும் 

ஆரோக்கியமான செயல்!


மேலே குறிப்பிட்ட அந்த தென்காசி கோவை நண்பர்கள் இருவரும் 

தெய்வம் இதழின் சர்குலேஷனை உயர்த்திக் காட்டுவது நமது கடமை என்று 

உரத்துக் குரல் கொடுத்து வருவது 

மகா காரியம்.

இதுவரை அடியேனுக்குத் தெரிந்து 

இந்த மாதிரி சுயநலம் ஏதுமில்லாமல் பரந்த 

விரிந்த மனதுடன் யாரும் இயங்கியது இல்லை( பத்திரிகை துறையில்)என்று தான் சொல்லத் தோன்றுகிறது.


தமிழ் நாடு இ பேப்பரின் வாசக நண்பர்களிடம் இயன்ற வரை அலை பேசியில் இது சம்பந்தமாக முறையிட்டு வருகிறார்கள்.

அடியேனிடமும் சில நாட்களுக்கு முன் பேசினார்கள்.

உணர்ச்சி ததும்ப,

இதை ஒரு வேள்வியாக -- தவமாக எடுத்துச் செயல் படுகிறோம் என்று 

அவர்கள் பேசியது நெஞ்சம் நெகிழச் செய்தது.


எப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளம் இருந்தால் இப்படி யெல்லாம் சிந்தித்து செயல் பட முடியும்.

வாசக நண்பர்கள் அனைவரும் தயவு செய்து இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அடியேனும் அவர்களைப் போலவே 

பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


இது சம்பந்தமாக கவிதை, கட்டுரை பக்கங்களில் தொடர்ந்து பங்காற்றி 

ஜெயக்கொடி நாட்டி வரும் படைப்பாள நண்பர்களும் இந்த விஷயத்தில் தாராள மனதுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று 

மீண்டும் வேண்டுகிறேன்.


முயற்சி செய்தால் முடியாதது என்று இங்கே எதுவும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!


மேலும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் 

கூட்டுவது என்பது கடினமான காரியம் கிடையாது.


விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக ஆன்மீக விஷயங்கள் 

குறைவின்றி கிடைக்கும் தெய்வம் இதழுக்கு ஆள் சேர்ப்பது என்பது 

அல்வா சாப்பிடுவது மாதிரியான இனிமையான விஷயம்.

மனம் மட்டும் இருந்தால் போதும்.

நம்பிக்கையும் இணைந்து விட்டால் 

வெற்றி நிச்சயம்.


சமூகத்தில் நல்லறம் ஓங்கி மக்களுக்கு நல்லவைகள் கிடைப்பதற்கான பெரும் பணியில் 

தங்களை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்தி யிருக்கும் 

தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குடும்பத்தின் அளப்பறிய பணிக்கு 

ராயல் சல்யூட் அடித்தால் மட்டும் போதாது.


அன்புக் கரத்தை நேசமுடன் நீட்டி 

முழு ஆதரவை வழங்கி வெற்றி இலக்குக்கு விரைவில் வழி வகை காண

வேண்டும்.


நாம்.ஒவ்வொருவரும் உள்ளன்புடன் ஒரு சில நாட்கள் கொஞ்ச நேரத்தை ஈடுபடுத்தினால் போதும். காரியம் நிறைவேறி விடும்.

தெய்வம் இதழின் எண்ணிக்கையை 

லட்சத்திற்கும் மேலாக 

உயர்த்தி விடலாம்.

அப்புறம் கேட்கவே வேண்டாம்.

ராஜ பாட்டையில் வெற்றி நடை போடும் 

வாசகர் இதழாக 

தெய்வம் ஜொலி ஜொலிக்கும்!


ஆகவே, அன்பார்ந்த தமிழ் நாடு இ பேப்பரின் வாசக நல்

 உறவுகளே!


சுவாமி விவேகானந்தர் 

ஆத்மார்த்தமாக அருளிய வரிகள் தான் நினைவுக்கு வருகிறது....


All power is within Us...

So We can do anything and everything...


All the best, Friends...



நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%