இந்தியாவையும் ரஷ்யாவையும்
சீனாவிடம் இழந்து விட்டோம்
என டிரம்ப் புலம்பல்.
பிரிந்தவர்கள் இணைய வேண்டும்
என செங்கோட்டையன் பேச்சு
இந்த இதழில் ஆன்மீக செய்திகள்
அனைத்தும் அருமையாக இருந்தது
பழனிச்சாமி முதுகில் குத்தி விட்டார்
என பிரேமலதா கருத்து.
வெள்ளை உணவுகள் உடலுக்கு
தீங்கு விளைவிக்கும். 20
ஆண்டுகளாக பதிவு உயர்வு இல்லை
என புதுச்சேரி உதவி
பேராசிரியர்கள் போர் கொடி
.
காலி மது பாட்டில்களை திரும்ப பெற
வேண்டும் என கோர்ட் உத்தரவு
நெல்லைக் குரலோன் மற்றும்
முத்து ஆனந்த் அவர்கள் கவிதை
இரண்டும் சூப்பர் ரகம்.
வர வர வாசகர் கடிதங்கள்
சுருங்கி வருவது ஏன் என்று
தெரியவில்லை.
நடனமாடுபவர்களுக்கும்
திடீரென மாரடைப்பு வரும்
சாத்திய கூறுகள் உள்ளது.
உப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
எதுவுமே அளவோடு இருக்க
வேண்டும் . காஷ்மீரில் மீண்டும்
நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தூர் மருத்துவமனையில்
எலி கடித்து இரண்டு குழந்தைகள் பலி
ஒரே காரில் மோடி புதின்
சென்றனர். என்ன பேசிக்
கொண்டார்கள் என்று தெரியவில்லை
சீன ராணுவ அணிவகுப்பில்
ரஷ்யா வடகொரியா பங்கேற்பு.
ஆன்மீகம் வளர்ச்சி அடைய
நாம் அனைவரும் தெய்வம் இதழுக்கு
சந்தா கட்டி சேர்ந்து ஆதரவு
அளிக்க வேண்டும். மேலும்
குறைந்த பட்சம் ஐந்து நபர்கள்
நாம் சேர்த்து விட வேண்டும்.
வருங்காலத்தில் ஆன்மிகம் தான்
உலகில் முக்கிய பங்கு வகிக்கும்.
உலகில் அமைதியான
வாழ்க்கைக்கும் போர் இல்லாத
வாழ்க்கைக்கும் ஆன்மீகம்
மிகவும் அவசியம்.
தமிழ்நாடு இ பேப்பர் நடவடிக்கைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?