வாசகர் கடிதம் (பாளை. கணபதி) 06.09.25

வாசகர் கடிதம் (பாளை. கணபதி) 06.09.25


உயர்ந்த மனம் கொண்ட உன்னத வாசக சொந்தங்களுக்கு வணக்கம்.


ஆனந்த பாஸ்கர் இதழ் மூலம் ஓர் பூடு என்ற நான் இதுவரை அறியாத தாவரம் பற்றி அறிந்து கொண்டேன். 


மனம் ஒரு தோட்டம் என்ற உருவகக் கட்டுரை சிறப்பு. இனி தமிழ்நாடு இ இதழ் செய்திகள் குறித்து :


வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு GST 2.0 என்று புகழ்கிறார் திரு. இ. பி. எஸ். 

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி என்கிறார் முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம். அவரவர் நோக்கில் அவரவர் திருப்தி. 


மரம் வெட்டுதல் குறித்த கவலையை நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் செய்தி மீது அனைவரும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.


இந்தியாவுடனான நட்புறவை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க அதிகாரிகள் உணர்கிறார்கள். அதிபர் உணர மறுக்கிறார். இடிப்பார் இருந்தும் ஏமரா மன்னனாக இருக்கும் அதிபர் கெடுப்பார் இல்லாமலே கெட்டுப்போகிறார்.


கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்களின் மறைவு -- தமிழ் மாலையின் பூ ஒன்று உதிர்ந்து விட்டது. RIP.


நலம் தரும் மருத்துவம் மற்றும் வாழ்வு தரும் ஆரோக்கியம் ஆகிய பகுதிகளில் உள்ள தகவல் கட்டுரைகள் சமூக நலன் கருதி தமிழ்நாடு இ இதழ் குழுமத்தாரின் இணையற்ற சேவைக்கு எடுத்துக்கட்டாய் திகழ்கின்றன. அரிசிக்கும் கோதுமை உணவுக்குமான பண்புகள் குறித்த விளக்கம், ஆயுர்வேத மருத்துவத்தில் எந்த வயதுகளில் என்ன உடற்பிணிகள் தோன்றும் என்ற தகவல், உப்பு நல்லதா தீயதா என்ற தெளிவு, வயிற்றின் நலனுக்கு உகந்த சிறந்த எளிய உணவுகள் - என எல்லாமே சிறந்த அறிவு விளக்கமாக ஜொலிக்கின்றன. DJ - disc Jockey இரைச்சலின் மோசமான பாதிப்புகள் பற்றிய அறிவூட்டல் கவனத்துக்குரிய தகவல். 


தொழில்நுட்பம் மருத்துவத்தை எளிதாக்குகிறது என்பதில் சற்றும் ஐயமில்லை. இதுகுறித்த கட்டுரை சிறந்த நாலெட்ஜ் அப்டேட்.


பயணங்களின் வகைப்பாடுகள் குறித்த கட்டுரை அருமை. வாழ்க்கைப் பயணத்தில் விரைந்து செல்லும் நாம் இத்தகைய ஓரிரு பயணங்களையாவது மேற்கொள்ளுவது வாழ்க்கையை மகிழ்வாக்கும். 


முகில். தினகரனின் "அனுபவமே ஆசான்" கதையைப் படிக்கும் போது பிரபல தமிழ் நாளிதழ் க்ரூப் ஒன்றின் நிறுவனரின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உண்மையை விதந்து கூறும் கதை அருமை. 


எம். பி. தினேஷ் அவர்களின் "பெண்ணே" என்ற கவிதை வசீகரக் கற்பனை. பாராட்டுக்கள். 


"ஒப்பிடாதே ஆனால் ஒப்பிடு" என்று என்னத்தக் கன்னையா ஸ்டைலில் ஏற்றதொரு கருத்தை முன்வைத்துள்ளார் திரு. நெல்லை குரலோன் அவர்கள். Self assessment leads to success என்ற கருத்தை தனக்கே உரிய நடையில் உரைத்துள்ள விதம் அழகு. 


வணிகப் பொருள் ஒன்றின் சந்தை வெற்றிக்கு அதன் தரம் மட்டுமின்றி பேக்கேஜூம் ஒரு முக்கிய காரணி. அந்த அடிப்படையில் வாசகர் கடிதம் பகுதி கலை நயம் மிளிரும், வண்ணங்கள் குழைத்த வடிவழகில் புதிய லே அவுட்டில் பொதிந்து வந்துள்ளது. நாள் ஒரு புதுமை இ இதழின் அருமை. பாராட்டுக்கள். 


வட்டாரச் செய்திகள் தாராளம். ஆன்மீகத் தகவல்கள் ஏராளம். இவை எல்லாமே இலவசம். மாரியைப் போல் வாரி வழங்கும் இ இதழ் குழுமத்தாருக்கு நன்றிகள் பல. 


சமூக நலன் கருதி சிறப்பாக இயங்கி வரும் நமது இ இதழுக்கு நாமாற்றும் கைமாறு தெய்வம் இதழின் சந்தாதாரர் வலிமையைக் கூட்டுவதுதான். திரு. வெங்கடாசலம் அவர்களின் வாசகர் கடிதத்தில் வரும் தீவிரத்தை அனைவரும் வெளிப்படுத்தி ஒத்துழைக்க விண்ணப்பித்து நிறைவு செய்கிறேன். நன்றி. மீண்டும் நாளை சந்திப்போம். 


பாளை. கணபதி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%