
அன்புடையீர்,
வணக்கம். 10 .9 .25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திருர ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி என்று செய்தி ஆவலுடன் படிக்க வைத்தது இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு அமைய உதவியது மனமார்ந்த பாராட்டுக்கள்.
திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். மனமார்ந்த பாராட்டுக்கள் நலத்திட்ட உதவிகளை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய படமும் செய்து மிகவும் அருமை.
சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு நல்லது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு சப்பாத்தியை விட்டு விட்டு இதை சாப்பிடுங்கள் என்று நல்ல அருமையான தகவலை நலம் தரும் மருத்துவம் பகுதியில் படித்து தெரிந்து கொண்டு மனமார்ந்த பாராட்டுக்கள்.
அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் என்ற படத்துடன் பார்க்கும்போது அங்கு சென்ற ஒரு பிரமிப்பும் மகிழ்ச்சியும் வந்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் செண்பகராமன் வரலாறும் அவரைப் பற்றிய செய்தி மிகவும் அறிவித்து விருந்தளித்த தகவலாக எண்ணி ஆவலுடன் படிக்க வைத்தது .
பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை மீம்ஸ் விடுகதை என்று எல்லாமே என்னை ஆவலுடன் பார்த்து ரசிக்க வைத்தது.
1050 பேருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அடையாள அட்டைகள் வழங்கிய செய்தி மிகவும் அருமை புதிதாக சிறந்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை கொடுத்து ஊக்கம் கொடுப்பது நல்ல தகவல் .
சுற்றுலா என்ற பகுதியில் வந்த நவகிரக தோஷம் போக்கும் திருத்தலம் பற்றி படித்தது மகிழ்ச்சியாக இருந்தது தோரணமலை முருகன் கோவில் காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு நல்ல தகவல்.
அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய போவதாக சொன்னது மிகவும் நான் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
மெட்ரோ நிலையங்களில் கூடுதல் இணைப்பு வாகனம் தனி துணை நிறுவனம் அமைக்க முடிவு மிகவும் அருமை இதனால் பயணம் செலுபவர்களுக்கு எளிதாக இருக்கும்.
கயானா ஜனாதியாக இர்ஃ வான் அலி பதவியேற்பு என்ற செய்தி அயல்நாட்டு செய்தி மிக அழகாக சொன்னது பாராட்டுக்குரியது.
எல்லா பக்கத்திலும் நல்ல செய்திகளாக இருந்ததால் ஆவலுடன் படித்து உலக நடப்பினை புரிந்து கொண்டேன்.தினமும் இப்படி ஒரு நல்ல அருமையான சந்தர்ப்பத்தினை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் காம் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?