அன்புடையீர்,
வணக்கம் 27/8/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன தமிழ்நாடு இ பேப்பர் இன் ஆசிரியர் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து வாசகர்களுக்கும் வினாக செலுத்திய நல்வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
முதல் பக்கத்தில் வந்த மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என்ற செய்தி மிகவும் அருமை. பாராட்டுக்கள். இன்றைய பஞ்சாங்கம் எனக்கு நல்ல நாளாக அமைய உதவியது மிக்க நன்றி..
இன்றைய திருக்குறள் மிகவும் அருமை பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். 15 கலைஞர் அவர்களுக்கு விருதுகள் காசோலை கொடுத்தது நல்ல செய்தி. சுதந்திர இந்தியாவில் தமிழரின் பெருமை உரையரங்கம் படிக்க படிக்க தமிழச்சி என்ற பெருமையாக உணர்ந்தேன்.
பஸ் காரில் போகும்போது வாந்தி வருவது இயற்கை. அதை எப்படி தீர்த்துக் கொள்ளலாம் என்று நல்ல தீர்வை சொன்ன நலம் தரும் மருத்துவ பகுதி மிகவும் அருமை. பலருக்கும் பயனுள்ள தகவல் இது பாராட்டுக்கள்.
சென்னை மாநகராட்சியில் 32 வகை சேவைகள் மட்டுமே இனி வாட்ஸ் அப்பில் இருக்கும் என்ற செய்தி நல்ல தகவல் பாராட்டுக்கள். காவிரி ஆறு செல்லும் வழி எங்கும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று எடப்பாடி அவர்கள் உறுதிமொழி அளித்தது அவர் அரசியலை நன்றாக புரிய வைத்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் டி. ரங்காச்சாரி அவர்களின் வரலாறும் புகைப்படமும் மிகவும் அருமை படிக்கும்போது வரலாற்று செய்தியை படித்த மகள் மன மகிழ்ச்சி ஏற்பட்டது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த வளர்பிறை சதுர்த்தி இதை செய்தால் உங்கள் வாழ்வு அமோகமாக இருக்கும் என்று தகவல் மிகவும் அருமை. மீம்ஸ் மிகவும் அருமையாக இருந்ததால் பலமுறை பார்த்து ரசித்து சிரித்தேன் .
அருள்மிகு ஸ்ரீ அறிவுகோற்கையன் ஆலயத்தில் நெய்வேத்தியத்துடன் தீபாரதனை என்ற படமும் செய்தியும் மிகவும் அருமை. பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது அங்கு செல்ல முடியவில்லை என்று ஏக்கத்தை தீர்த்து ஆசையுடன் பார்த்து ரசிக்க வைத்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த பெண்கள் தனியாக பயணிக்க 6 இடங்கள் என்று அருமையான தகவலை சொன்னது பாதுகாப்பாக பயணம் செய்ய உதவும் பாராட்டுக்கள்.
திருச்செந்தூரில் மூன்றாவது நாளாக கடல் உள் வாங்கியது என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. கிரைம் கார்னர் மிகவும் அற்புதம் பாராட்டுக்கள்.
சியாங்ராய் ஒகினாவா டோக்கியோக்கு புதிய தடங்களுடன் விமான சேவை என்று புதுடெல்லியில் நடக்கும் செய்தி மிகவும் அருமை.
கியூபாவின் மருத்துவக் குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியான தகவல். அமெரிக்க தலைநகரில் இராணுவ மயமாக்கல் என்ற வாஷிங்டனின் நடந்த செய்தி அமெரிக்காவில் நடப்பதை கண்முன்னே கொண்டு வந்து காட்டியது.
ஒவ்வொரு நாளும் புதிய தகவல்களை புதிய விதத்தில் அழகாக விடியலில் கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் நன்றியும் பாராட்டுக்களும்
நன்றி
உஷா முத்துராமன்