
ராஜராஜ சோழன்,
ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் பிரதமர். சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் ஒரு பொற்காலமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆகி ஏழு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
மூன்று வெள்ளை நிற பொருட்களை அளவாக பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அவை உப்பு , சர்க்கரை, மற்றும் பால். சர்க்கரை பாதிப்பினால் மாரடைப்பு, வாதம்,
சிறுநீரக பாதிப்புகள் வரலாம் எனவும் சர்க்கரை நோயின் தலைநகரமாக இந்தியா உள்ளதாகவும் நலம் தரும் மருத்துவம் கூறுகிறது. அதை போல் எண்ணெய் உபயோகத்தை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு வீடுகளில் சமையலுக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகித்து நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தார்கள். தற்பொழுது ரீபைண்ட் ஆயில் என்று பலதரப்பட்ட எண்ணைகள் வந்து உடல் நலம்தான் பாதிக்கப்படுகிறது. இதற்கு உணவு கட்டுப்பாடு தான் வழி.
காந்தியின் வழியை ஏற்றுக்கொண்டவரும், மரணத்துக்கு பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டவரும், குவஹாத்தியில் உள்ள விமான நிலையத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டதும், இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும் பங்காற்றிய வரான கோபிநாத் பர்தலை வரலாறு சிறப்புமிக்கது.
பன்முகம் பகுதி பல தகவல்களை தந்தது.
எஸ் .அப்துல் ரஷீத்.
தஞ்சாவூர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?