இப்போதெல்லாம் மருத்துவத்தில் வெந்தயத்திற்கு அதிக பயன்களை சொல்லுகிறார்கள். நலம் தரும் மருத்துவ பகுதியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, எலும்பு ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்த, சரும ஆரோக்கியம் சிறப்பாக வெந்தயம் பயன்படும் என்பதை அறிந்தபோது, வெந்தயத்தை உணவில் போதுமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்திருக்கிறது.
'வரலட்சுமி நோன்புக்கு சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?' என்ற பெயரைப் பார்த்து, என்ன சிறுகதைக்கு இப்படி ஒரு பெயராயென்று முதலில் ஆச்சரியப்பட்டேன். அப்புறம்தான் இது வழக்கமான சிறுகதை பகுதியில் வெளிவந்திருக்கும் சமையல் குறிப்பு என்பது எனக்கு புரிந்தது!
'தாய்மை' என்ற ராஜஸ்ரீ முரளியின் சிறுகதை ஒரு பெண்ணுக்குதான் குழந்தையின் உடல் நலனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று தெரியும் என்பதை உணர்த்துவது போல சிறப்பாக இருந்தது. அவந்திகாவின் குழந்தையின் பசிக்கு இக்கட்டான சூழ்நிலையில், தன் பாலைக்கொடுத்து சமாளித்த வேலைக்காரி சரளா மனதளவில் மிக உயர்ந்து நிற்கிறாள்.
ஹரணியின் 'வாழ்ந்தே தீருவோம்' தொடர்கதை பஸ் பயணத்தில் மாதவனின் மலரும் நினைவுகளுடன் மனதை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. இவ்வளவு நல்ல மாதவனுக்கு இப்படியொரு மனைவியா வந்து வாய்க்க வேண்டும் என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது.
'தீபங்கள் பற்றிய அரிய தகவல்கள்' என்று சிவ.முத்து லட்சுமணன் தொகுத்து தந்த இருபது தகவல்களும் ஆச்சரியத்தை தரும் வகையில் அற்புதமாக இருந்தது.
கவிஞர் இரா.இரவியின் 'கொடியது எது?' என்ற கவிதை மதுதான் கொடியது என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்லியிருந்தவிதம் பாராட்டுக்குரியது. ஒன்றல்ல, இரண்டல்ல; அறுபதுக்கும் மேற்பட்ட விதத்தில் மது செய்யும் கொடுமைகளை இந்த கவிஞர் சொல்லியிருந்தவிதம்
குடிப்பவர்களை கூட மாற்றும் விதத்தில் இருக்கிறது.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?