வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 19.10.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு) 19.10.25



  கே.பி. ஜனார்த்தனனின் 'இளகிய மனம்' சிறுகதை போலியான நகையைவிட மனசாட்சியுள்ள நல்ல மனிதர்களே உயர்வானவர்கள், அவர்கள் நிச்சயம் ஏமாற்றமாட்டார்கள் என்பதை உணர்த்தியது. மிக உயர்ந்த சிறுகதை.


  முகில் தினகரனின் "ஏமாற்றாதே... ஏமாற்றாதே?" சிறுகதை பிள்ளையாருக்கு சேரவேண்டிய தேங்காய் பிள்ளையாருக்கே வந்து சேர்ந்தவிதம், வியப்பான அற்புதமாக இருந்தது. ஏமாற்றினால் ஆதற்கான தண்டனை எப்படியும் கிடைக்கும் என்பதையும் இந்த கதை உணர்த்தியது.


  'மதுரைமீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்' என்ற தகவல்கள் தெரியாத பல விஷயங்களை சொல்லியது. செல்லம் சேகரின் இந்த தொகுப்பு மிகச்சிறப்பு.


  புதுக்கவிதை பகுதிகளில் விதம் விதமான சுவையான கவிதைகள் எப்போதுமே தமிழ்நாடு இ.பேப்பருக்கு ஒரு தனி சிறப்பை தருகிறது. தமிழ்நாடு இ.பேப்பரில் மிக சிறப்பான பல்சுவை பக்கங்கள் என்றால் அது நிச்சயம் இந்த கவிதை பக்கங்கள்தான்.


  பல்சுவை களஞ்சியம், ஜோதிடம் அறிவோம் பகுதிகள் மறக்கமுடியாதபடி மனதில் நிற்கிறது. எல்லா வகையிலும் எல்லாவிதத்திலும் நல்ல தரமான நாளிதழ் என்றால் அது தமிழ்நாடு இ. பேப்பர்தான். அதன் வாசகனாக இருப்பதே மனதிற்கு ஒரு தனி மகிழ்ச்சியை தருகிறது.



  -சின்னஞ்சிறுகோபு,

   சிகாகோ.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%