
நமது வரலாற்றின் துயரமான
அத்தியாயம் தேச பிரிவினை என
மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தூய்மை
பணியாளர்களுக்கு இலவசமாக
காலை உணவு வழங்கப்படுகிறது.
லேப்டாப் மொபைல் அதிகம்
பயன்படுத்தினால் மலட்டுத்தன்மை
ஏற்படும். ஜப்பானிய மூளை காய்ச்சல்
வேகமாக பரவி வருகிறது.
சீரக சம்பா அரிசி கிலோ ஒன்னுக்கு
210 ஆக உள்ளது.
போதைப்பொருட்கள் சமூக
வலைத்தளங்கள் மூலம் விற்பனை
செய்யப்படுகிறது. முதியவர்கள்
சாப்பிடக்கூடிய சத்தான உணவுகள்
பற்றிய கட்டுரை நல்ல விழிப்புணர்வு.
திராட்சை விதைகள் நல்ல
மருத்துவ பயன்கள் கொண்டது
என்ற விவரம் கட்டுரை மூலம்
தெரிந்து கொண்டோம். 79 மீட்டர்
நீளமுள்ள தேசிய கொடியை
திருப்பூர் சிபிஎஸ்சி மாணவர்கள்
ஏந்தி படித்து சாதனை புரிந்தனர்
திருச்செந்தூர் முருகன் கோவிலில்
ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்.
மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
திருப்பதி கோவிலில் ஒரு பக்தர்
25 லட்சம் மதிப்புள்ள நகைகளை
காணிக்கையாக வழங்கினார்.
பீகார் வாக்குத்திருட்டு பற்றிய
விழிப்புணர்வு நடைப்பயணத்தை
ராகுல் நடத்த உள்ளார்.
காசாவை கைப்பற்ற இஸ்ரேல்
திட்டம். டிரம்ப் பாகிஸ்தானுக்கு
ஆதரவாக செயல்படுகிறார்.
டிரம்ப் மூக்கை நுழைக்காத
நாடுகளே இல்லை எனலாம்.
அதிகாலை கோழி கூவும் முன்னே
எங்களுக்கு இ பேப்பர் கிடைத்து
விடுகிறது. கட்டுரைகள் கவிதைகள்
உள்ளூர் செய்திகள் சமையல்
குறிப்புகள் எல்லாமே படிப்பதற்கு
ஆனந்தமாக உள்ளது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கு
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?