
கரூர் உயிரிழப்புக்கு சட்டசபையில்
இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்து
20 பேர் உயிரிழப்பு. உள்ளூர்
செய்திகள் அனைத்தும் நல்ல
முறையில் தொகுத்து வழங்கி
இருப்பது பாராட்டத்தக்கது.
இருமல் மருந்து கம்பெனி உரிமம்
ரத்து செய்யப்பட்டது. கால்களில்
ஏற்படும் நரம்பு முடிச்சு கட்டுரை
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
சென்னை மதுரையில் திருநங்கைகள்
தங்குவதற்கு இல்லங்கள்
திறக்கப்பட்டது. தங்க பத்திரத்திற்கு
கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
பனை விதைகளை கொடுத்தால்
பரிசுகள் கிடைக்கும் மாவட்ட ஆட்சித்
தலைவர் அறிவிப்பு. தீபாவளி
பண்டிகையை ஒட்டி டி நகரில்
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பலப்படுத்தப்பட்டுள்ளது. இபி எஃப் ஓ
மூலம் 100% பணம் எடுக்கலாம்.
ஜிடி நாயுடு பாலத்தில் கார் மோதி
மூன்று பேர் பலி. பாலம் திறந்து
ஒரு வாரம் கூட ஆகவில்லை.
கனடா அமைச்சர் மோடி உடன்
சந்திப்பு நடைபெற்றது. பீகார்
தேர்தலில் ஆர் ஜேடி 135 இடங்கள்
காங்கிரசுக்கு 61 இடங்கள் ஒதுக்கீடு.
காசா அமைதி ஒப்பந்தம் டிரம்ப்
முன்னிலையில் கையெழுத்து
இடப்பட்டது. இறந்த உடலை
பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து
ஈமச்சடங்கு செய்யும் இந்தோனேசிய
பழங்குடி மக்கள்.
தெய்வம் இதழ் படிக்க படிக்க
ஆனந்தமாக உள்ளது. கட்டுரை
எழுதுபவர்கள் அனைவரும்
நன்றாக எழுதி இருக்கிறார்கள்.
அதில் உள்ள அட்டைப்படம் உள்ளே
உள்ள படங்களும் கண்ணை கவரும்
விதத்தில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தின்
அனைத்து பத்திரிகைகளும்
பாராட்டும் வகையில் உள்ளது.
மீண்டும் நாளை சந்திப்போம்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?