
இன்று நாடாளுமன்ற
மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பம்.
நைஜீரியா நாட்டில் இரண்டு
இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட
காலமாக போராடிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். லிச்சி பழத்தில்
இவ்வளவு நன்மைகள் இருப்பதை
இப்போதுதான் தெரிந்து கொண்டேன்
மேட்டூர் அணை மூன்றாவது
முறையாக நிரம்பியது மகிழ்ச்சி
அளிக்கிறது. லட்சத்தீவில் உள்ள
பிட்ரோ தீவை கையகப்படுத்த
மத்திய அரசு முயற்சி செய்து
வருகிறது. மதிவாணன் அவர்களின்
போலி தோற்றங்கள் கதை
எதார்த்தமாக இருந்தது.
லட்சுமி ஆவுடை நாயகம் எழுதிய
சிவ பூஜையில் கரடி என்ற கட்டுரை
மூலம் உண்மையான அர்த்தத்தை
தெரிந்து கொள்ள முடிந்தது.
காஸ்ட்லி காரை அடமானம்
நினைத்தது தொடர்பான
கட்டுரை சிந்திக்க வைத்தது.
மனதுக்கு சக்தி கொடுக்கும் மந்திரம்
நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை
கொடுத்தது. நாட்டிலேயே
முதல்முறையாக டிஜிட்டல்
அரெஸ்ட் கும்பலுக்கு ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டது.
ரயில்வே விற்பனையாளர்களுக்கு
ஒரே மாதிரியான அடையாள அட்டை
வழங்கப்பட்டது. ஒலிம்பிக் சிறப்பாக
பங்கேற்கும் வீரர்களுக்கு மாதம்
50000 உதவிதொகை வழங்க
அமித்ஷா உத்தரவு. அருணாச்சல
பிரதேசத்தில் இந்திய எல்லையை
ஒட்டி சீனா மிகப்பெரிய
அணையை கட்டி வருகிறது.
திருப்பதி தேவஸ்தானத்தில்
மாற்று மாதத்தைச் சார்ந்த நான்கு
ஊழியர்கள் பணி நீக்கம்
செய்யப்பட்டு உள்ளனர். வியாபாரம்
நோக்கத்தோடு செயல்படும்
இன்றைய பத்திரிகை உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
தனித்துவமாக வீறு நடை போட்டு
வெற்றிகரமாக இயங்கி வருகிறது
தமிழ்நாடு இ பேப்பர். அதற்காகவே
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தை
மனதார பாராட்டுகிறேன்.
அதன் வெற்றிக்கு நாம் அனைவரும்
ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?