வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 18.09.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 18.09.25



சமூக வலைத் தளங்களில் சக்கை போடு போட்டு ஜெயக்கொடி நாட்டி வரும் தமிழ்நாடு இ பேப்பர் டாட் காம் குழுமத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!


குறுகிய காலத்தில் மாபெரும் வலுவான சக்தியாக விஸ்வரூபம் 

எடுத்து எல்லோரையும் வியப்பில் புருவம் உயர்த்த வைத்திருக்கும் ஆசிரிய தலைமைக்கு 

சபாஷ்... சபாஷ்!


நடைமுறைப் பிரச்னை களையெல்லாம் சுலபமாக கையாண்டு 

வாசகப் பெருமக்களின் அமோக ஆதரவையும் 

நம்பிக்கையையும் பெற்றுள்ள தலைமை ஆசிரியரின் தைரியம் மிக்க சிந்தனையும் செயல்பாடும் வாசக சொந்தங்களுக்கு வாழ்க்கைப் பாடம்!


ஒரு புகழ்பெற்ற கவிஞன் சொல்லுவான்...


' நான் சுறா மீனின் 

ஆபத்தில்லாத கடலில் 

படகைச் செலுத்த மாட்டேன் '


வாழ்க்கையை உயிர்ப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பதே, கஷ்டங்கள், பிரச்னை கள் தான் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுவதை 

நிஜமாக்கிக் காட்டி 

இணைய பத்திரிகை உலகில் இமாலய சாதனைகளைப் படைத்து வரும் 

தமிழ் நாடு இ பேப்பர் டாட் காம் குழுமத்தின் இந்த அசைக்க முடியாத வெற்றிக்கான காரணிகளை பட்டியல் 

படுத்த முயன்றாலே நாம் பாதி வெற்றிக்கு அதிபதி ஆகி விடலாம்.


புயலை சவாரி செய்யவும் வெயிலை சமாதி செய்யவும் துணியும் பேராற்றலைப் பெற்றிடலாம்.


ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் அழிக்க முடியாத பாடத்தைப் பெற்றிடும் வல்லமைப்

பண்பினை நமக்கு ஊட்டி வரும் தமிழ் நாடு இ பேப்பர் டாட் காம் குழுமத்தின் 

இலக்கினை நிறைவேற்றி வைக்க 

நம்மாலான பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வந்தால் ஆண்டவனின் கருணைப் பார்வை நம் மீது நிச்சயம் விழும்.


இது வெறும் வார்த்தை இல்லை... அனுபவச் செழுமையில் விளைந்த உண்மையான உயிர்ப்பான வார்த்தை. முழுக்க முழுக்க நம்புவது தான் 

முக்கியம்.


பிரியத்துக்குரிய வாசக சொந்தங்களே!

நல்லதை நினைத்து நல்லதைப் பேசி நல்லதை ஆற்றுகின்ற வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.


இதை மீண்டும் மீண்டும் பகிரும் போது 

மந்திர வலிமை பெறுகிறது. மனம் பன்மடங்கில் பலம் பெறுகிறது.


நமக்குக் கிடைக்கும் பலத்தை -- பக்குவத்தை ஆக்கசக்திக்கு பயன்

படுத்தி நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து பார்ப்பது மகத்தான மாண்பு.


தினந்தினம் வாசிக்கும் இதழுக்கு 

விசுவாசமாக இருக்கும் மேன்மையான காரியத்தில் நம்மை ஈடுபடுத்துவோம்.


அதற்கான முதல் முயற்சியாக அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அற்புதப் பணியில் ' அணில் ' சேவை செய்து தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்!


வாழ்க வளமுடன்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%