வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 26.09.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 26.09.25



செப்டம்பர் 22 தேதியிட்ட, அருள் தரும் தெய்வம் இதழின் பரபரப்பு இன்னும் எங்கள் இல்லத்தில் எதிரொலித்த படியே 

இருக்கிறது என்பது உண்மை.


ஆபீஸ் பணி முடித்து, வீட்டுக்கு வந்து ஒன்றாக அமர்ந்து ஆசுவாசமாக தேநீர் அருந்தும் போதும்,

தெய்வம் இதழின் கட்டுரைகள் பற்றியே 

பேசுகிறோம் என்றால் 

பரபரப்பு அடங்க வில்லை என்று தானே அர்த்தம்.


தெய்வம் பற்றி முதலில் பேச்சு எடுப்பது என் தாயார் தான்.

வரி விடாமல் படித்து 

விடுகிறார். படித்ததோடு நின்று 

விடாமல் முக்கியமான 

கருத்துக்களை நாங்கள் அனைவரும் 

ஆஜராகி இருக்கும் போது பக்குவத்தோடு

விளக்கி சொல்லுவார்.

எங்களுக்கு அது பேரனுபவமாகவும் 

பெருமிதமாகவும் இருக்கிறது என்பது தான் முக்கியம்.


இந்த தெய்வம் இதழில் ஆசிரியர் எழுதியிருந்த மகிமைகள் நிறைந்த 

நவராத்திரி ஸ்பெஷல் கட்டுரையை நாங்கள் அனைவரும் படித்து 

ஆனந்தம் அடைந்தோம் என்பது உண்மை.


மூன்று பக்கத்தில் தெய்வம் இதழ் ஆசிரியர் நவராத்திரியின் சிறப்புகளை மிக மிக நேர்த்தியாக வடித்திருந்தது அருமை.

இதற்காக ஸ்பெஷல் பாராட்டை சொல்லியே ஆக வேண்டும்.


தினசரி தவறாமல் தியானம் செய்யும் என் சகோதரிக்கு, 'செய்க தவம்' தலைப்பை பார்த்ததுமே பரவசம் அள்ளி விட்டதாம்.


பாளையங் கோட்டை 

கணபதி அவர்களின் இந்த கட்டுரை அதி அற்புதம். 


மற்ற கட்டுரைகள் பற்றிய உரையாடல் எங்கள் குடும்ப வட்ட மேசை மாநாட்டில் இனி வரும் நாட்களில் 

இடம் பெறும்.


எங்கள் குடும்பத்தில் தெய்வம் இதழ் உண்டு பண்ணும் ஆக்கப்பூர்வமான 

தாக்கம் பற்றி அவ்வப்போது நாள் 

குறிப்பிட்டு எழுதுவதற்கு காரணம் உண்டு.


'நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

என்ற எண்ணம் தானே தவிர வேறொன்றும் இல்லை.


குடும்பத்தில் ஒற்றுமை யும் அமைதியும் நிலவுவதற்கு வழி வகுக்கும் அருள் தரும் தெய்வம் இதழ் எல்லா 

வீடுகளிலும் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது பேராசை இல்லை... பெரிய ஆசை...( தப்பில்லையே) 


அன்பான வாசக சொந்தங்களே!

என்னுடைய இந்த உண்மையான உணர்வினை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


நாம் நினைத்தால் 

தெய்வம் இதழின் சர்குலேஷனை உயர்த்திக் காட்டி 

நாமும் பலன் அடைந்து 

இந்த சமூகத்தையும் 

வளமாக்கி மேம்படுத்த முடியும்.


 இந்த உன்னதமான உயர்ந்த காரியத்தில் உள்ளன்புடன் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.


எளிதான பணி...

ஆனால் இதனால் ஏற்றம் அடையும், இந்த சமுதாயம்.


நல்லவை ஆற்றி நலம் பல பெற்று மேன்மை 

காணும், இந்த அரிய சந்தர்ப்பத்தை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழ் நாடு இ பேப்பர் குழுமம் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களும் 

அபார வெற்றி அடைய 

எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%