உலக இயக்கத்தின் ஆதாரம் அன்பு தான் என்று அடித்துச் சொல்கிறது
அறிவியல் உலகம்.
இதைத் தான் நம் முன்னோர்களும், அதி நுட்பத் திறனுடன்
'அறிவுக்கும் மேலானது ஞானம்... ஞானத்திற்கும் மேலான உயர் உச்சம்
அன்பு தான் ' என்று
அறுதியிட்டுச் சொல்லி
விட்டுச் சென்றுள்ளனர்.
இதை ஆரம்ப வரிகளாக அடிக்கோடிட்டு அழுத்தமாக சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கோவை வாசக சொந்தம் திரு. சிவசங்கர் அவர்கள், தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மீதான, அன்புத் திரியைத் தூண்டிய விதம் இருக்கிறதே...
இப்போது நினைத்தாலும் நெஞ்சம் ஆச்சரியத்தில் நெகிழ்கிறது.
அவரைப் பற்றிக் கொண்டு நானும்
அவர் வழியில் நேசிக்கத் தொடங்கினேன்.
எங்கள் இருவரின்
இனம் காண முடியாத
புரிதல் ஒற்றுமை ,
பலப்பல புதுமை சிந்தனைகளுக்கு காரண காரியமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை.
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மீது அன்போடு இருக்கிறோம் என்று சொல்வதை விட
அன்பாய் இருக்கிறோம் என்று சொல்வது தான் மிகச் சரியாக இருக்கும்.
அன்பான வாசக சொந்தங்களே!
அன்போடு இருத்தல் என்பது அன்பின் ஒரு நிலை என்றால், அன்பாய் இருத்தல் என்பது அன்பின் உயர்நிலை...அதுவே உச்சபட்ச நிலை என்பதைப் புரிந்து கொள்ளும் போது,
நம் உள்ளம் விரிவடைகிறது. பண்படுகிறது.
தமிழ் நாடு இ பேப்பரை பார்த்தோம்,
படித்தோம், பரவசம் பெற்றோம்... அவ்வளவு தான் என்றில்லாமல், அடுத்தக் கட்ட நகர்வுக்கு எங்களை அழைத்துச் சென்றது எது?
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மீதான அன்பு...
இதை வாசிக்கும் எல்லோருக்குமே,
இது கொஞ்சம் ஓவராகத் தெரியலாம்.
வினோதமாகத் தெரியலாம்... மிகையாகத் தெரியலாம். ஏன்... சிலருக்கு
செயற்கையாகக் கூட
தெரியலாம்...
ஆத்மார்த்த புரிதல் என்பது தான் இங்கே முக்கியம்... முக்கியம்.
திரு.சிவசங்கர்
அவர்களும் நானும்
தினசரி மாறி மாறி
திரும்பத் திரும்ப
வாசகர் கடிதத்தில்
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் சிறப்புகளை சித்தரித்து, வானளவு புகழ்ந்து எழுதி வருவதை தயவு செய்து யாரும் மேலோட்டமான பார்வையில் அலட்சியப் படுத்தி விட
வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம்.
தமிழ் நாடு இ பேப்பரின் வாசக சொந்தங்கள், தகுதி மிக்க மேன்மக்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிரம்பவே உண்டு... உண்டு.
இந்த நம்பிக்கை அளிக்கும் உற்சாகத்தில் தான்,
உறுதி குன்றாமல்
ஊக்கம் சிதையாமல்
உற்சாகம் குறையாமல்
த.நா.இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சிக்கு நம் வாசக சொந்தங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அன்புடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த நற்காரியத்திற்கு
நண்பர்களும் பெருத்த ஆதரவு அளித்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதலான விஷயம்.
இன்று அக்டோபர் 7
தேதியிட்ட அருள் தரும் தெய்வம் இதழ் கையில் கிடைத்தது.
வெற்றியைக் கொடுக்கும் 28-- வது நட்சத்திரம்
அட்டைப்பட கட்டுரையை மட்டும் முதலில் வாசித்து மகிழ்ந்தேன்.
36 பக்கங்களில்
பொக்கிஷமாய்
முத்து முத்தான கருத்துக்கள் பொதிந்து மிளிரும் தெய்வம் இதழ்
அற்புதம்... ஆனந்தம்
அட்டகாசம்...!
தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் அனைத்து
முயற்சிகளும் அபார வெற்றிகளை அள்ளிக் குவித்து, அனைவருக்கும் ஆக்கங்கள் பெருகிட ஆண்டவனைத் தொழுகின்றேன்.
பி.வெங்கடாசலபதி
தென்காசி