தெய்வம் இதழ் பற்றி சொல்லி, ஆரம்பித்தால் தான் மனதுக்கு இதமாக இருக்கிறது.
பூப்புனித நீராட்டு விழாவில் என் மனைவி தன் சிநேகிதிகளிடம் தெய்வம் இதழை அறிமுகப் படுத்தி வைத்ததன் எதிரொலி
உறவுகளிடமும் பற்றிக் கொண்டது. ஓராண்டு சந்தா கட்டணுமா?
ஈராண்டு சந்தா கட்டணுமா? என்று பட்டி மன்றம் நடக்காத குறை தான் போங்க...!
இதை ஏன் இங்கே முக்கியத்துவம் கொடுத்து கூறுகிறேன் என்றால்
எந்தக் காரியமும் தொடங்கும் போது மலை போல் மலைப்பு
வரும்...தொடங்கி விட்டாலோ, ஆயிரம் வாசல் திறக்கும்...!
இன்னொன்று...
தமிழ் நாடு இ பேப்பரை தினந்தினம்
வாசிக்கிறோம். வாசகர் கடிதம் எழுதுகிறோம்.
கவிதைகள் படைக்கிறோம். நமது சிருஷ்டிகளின் தொடர்
அரங்கேற்றம் பார்த்து
ஆனந்த பரவசம் அடைகிறோம்.
அத்தோடு சரி என்று
இருந்தால் போதுமா?
நினைத்துப் பாருங்கள். வாசகப் பெருமக்களுக்கு இந்தப் பரவச அனுபவம் கிடைப்பதற்கு தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின்
அயராத உழைப்பையும் மெனக்கெடலையும்
வார்த்தையால் வடிக்க முடியாது என்பது என் எண்ணம். இந்த மாதிரியான சிந்தனை
யின் காரணமாகத் தான் தெய்வம் இதழுக்கு நமது வாசகர் பங்களிப்பு
அவசியம் மட்டுமல்ல
கடமை என்று வலியுறுத்தி சொல்லத் தோன்றுகிறது. இதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை யும் கிட்டுகிறது. பேப்பர் பக்கம் வருவோமா?
உடன்பாடு எட்டப்பட வில்லை என்கிறார்
டிரம்ப்.
புரிதல் ஏற்பட்டுள்ளது என்கிறார் புடின்.
இந்த இரண்டு ஸ்டேட்மெண்ட்ஸை படித்ததும் அவரவர் மைண்ட் செட் என்னவென்று புரிகிறது.
திமுக கூட்டணிக்கு எதிரான சதித் திட்டங்கள் நிறைவேறாது --
சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி.
கூட்டணி தலைமையை நெருக்கடிக்குள் தள்ள வேண்டும் என்பது தானே கூட்டணி கட்சிகளின் எண்ணம் என்பதைத் தெரியாதவரா,
நம் முதல்வர்?
நலம் தரும் மருத்துவம் பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் தூதுவளை பற்றி எழுதியிருந்த தகவல் மிகவும் பயனுள்ளது.
அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம். ஆய்வில் உறுதி செய்தி நல்ல ஆறுதல்!
தமிழக போலீசார் 21
பேருக்கு ஜனாதிபதி விருது
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு சர்ச்சை வராமல் இருந்தால் சரி தான்!
என்.பத்ரியின் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் கட்டுரை பரவச ஆனந்த அனுபவம்.
பாராட்டுக்கள்!
சுரய்யா தியாப்ஜி வரலாறு அற்புதம்.
அந்தக் காலத்தின் அருமை பெருமைகளை உணர முடிந்தது.
கவிதைகள் அனைத்தும் வாழ்வியல் மேன்மைகளை படம் பிடித்துக் காட்டுவது மாதிரி இருக்கிறது.
படித்ததும் மனசு இலேசாகிறது.
வாசக உறவுகளை
வளப் படுத்தி வலிமை ஊட்டி வரும் தமிழ் நாடு இ பேப்பரின்
ஆசிரியர் குழுமத்தின்
அற்புதமான இந்தப் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பி.வெங்கடாசலபதி
தென்காசி