
முதல் சல்யூட் கவிதை பக்கங்களுக்கு...
விஸ்தாரமான சிந்தனைகள் கொடி கட்டிப் பிறக்கின்றன.
கவி உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!
மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும் என்ற சீரிய சிந்தனையை உள்ளடக்கிய குறள் நினைந்து நினைந்து போற்றத்தக்கது.
உடன்பாடு எட்டப்பட வில்லை --டிரம்ப்
புரிதல் ஏற்பட்டுள்ளது -+புதின்
ஒரே பேச்சுவார்த்தை க்கு இருவரின் வெவ்வேறு கமெண்ட்ஸ்...
யோசிக்க வைக்கிறது.
எப்படியோ நல்ல தீர்வு கிடைத்தால் சரி தான்!
அமைச்சர் ஐ.பெரியசாமி
இல்லம் உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை.
தேர்தல் வரும் பின்னே
சோதனை வரும் முன்னே என்று தான் சொல்ல வேண்டும்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வரும் தகவல்கள் யாவுமே மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
விதை நெல்
விட்டக்குறை தொட்டக்குறை சிறுகதைகள் சிந்திக்கவும் வைக்கின்றன.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருக்கும் சுரய்யா தியாப்ஜி வரலாறு அருமை அருமை...
சிந்திக்க வைத்து சிலிர்க்க வைக்கின்றன.
தமிழ் நாடு இ பேப்பர் தினசரி தவறாமல் அள்ளி வழங்கி வரும்
படைப்புகளுக்கும் செய்திகளுக்கும் வாசகர்களாகிய நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
இந்த சுவாரஸ்யம் மிக்க இனிய பயணம்
தொடரட்டும்... ஜெயக்கொடி நாட்டட்டும்!
பி.சிவசங்கர்
கோவை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?