தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் அரும் பெரும் நற்பணிக்கு
நன்றியுடன் வணக்கம்.
இன்று வெளியாகி இருக்கும் திருக்குறள் என்னை மிகவும் கவர்ந்தது.
செல்வம் நிலைக்காத இயல்பை கொண்டது.அத்தகைய
செல்வத்தைப் பெற்றால் பெற்ற அப்போதே நிலையான அறங்களை செய்ய வேண்டும்.
இன்று திருக்குறளையும் பொருளையும் படித்ததும் கூடவே இன்னொரு சிந்தனை
என்னைப் பற்றியது.
குறளைப் படித்து ரசித்து மகிழ்வதோடு நின்று விடக் கூடாது.
அது காட்டும் வழியை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று சங்கல்பம் எடுத்தும் கொண்டேன்.
உடனே பின்பற்றும் விதமாக ரூபாய் 399
ஐ ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட என்
பக்கத்து வீட்டு பெரியவர் பெயருக்கு நமதுஅருள் தரும் தெய்வம் பத்திரிகைக்கு சந்தா
அனுப்பி என்னை நானே கிள்ளிக் கொண்டேன்.
கூடவே இன்னொரு குறளும் நினைவில் வந்து நெஞ்சம் நனைத்தது.
கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக.
இதை நமது வாசக சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த அருமையான
அனுபவத்திற்கு காரணமாக விளங்கும்
தமிழ் நாடு இ பேப்பருக்கு ராயல் சல்யூட்!
ராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள்
பிரதமர் மோடி உறுதி.
பாரம்பர்ய பெருமை போற்றப் படுவதும் சிலாகிக்கப் படுவதும்
பெருமிதம் அளிக்கும் பெருமைக்குரிய விஷயம் தானே!
பெருமைக்குரிய பிரதமர் என்று மோடியை கொண்டாடவும் தோன்றுகிறது.
செய்திகளை கன கச்சிதமாக வெளியிட்டு வாசிக்கத் தூண்டுகிற தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் நேரிய பணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நலம் தரும் மருத்துவம் பகுதியில் உப்பு, எண்ணெய், சர்க்கரை பற்றிய எச்சரிக்கை தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. உடல் நலம் பற்றிய பயத்திற்கு காரணமாகவும் இருந்தது. அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது பேதமை அல்லவா?
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருந்த அஸ்ஸாம் புகழ் கோபிநாத் பர்தலை வரலாறு இதுவரை அறியாத தகவல்களை தந்து பரவசப் படுத்தியது.
சபாஷ்... சபாஷ்!
கோபிநாத் வரலாறைப் படித்ததும் தமிழ் நாடு இ பேப்பரின் தலைமை ஆசிரியர் அவர்களும்
மின்னிதழில் வரலாறு படைத்து வருகிறார் என்பது பிரயத்தனம் பண்ணாமலே நினைவுக்கு வந்தது.
புதிய முயற்சியில் புயலாய் புறப்பட்டிருக்கும் அவர் தம் காரியங்கள் அனைத்தும் கடவுள் கருணையால் கை கூடி நிறைவேறட்டும்!
கவிதைப் பக்கங்களின் தரம்
நாளுக்கு நாள் மெருகேறி வளர்வது
நன்கு தெரிகிறது.
வாழ்த்துக்கள்!
தமிழ் நாடு இ பேப்பரில் சிறுகதை எழுதும் எழுத்தாள நண்பர்கள் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதினால் நன்றாக இருக்கும்.
இது என் அன்பான வேண்டுகோள்!
சினிமா செய்திகள்
கலக்கல்... கலக்கல்!
வாரத்தில் ஒரு நாள்
தலையங்கம்...
சாத்தியமா சார்?
பி.வெங்கடாசலபதி
தென்காசி