வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி ) 17.07.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி ) 17.07.25


அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியதால் அந்த அமைப்புக்கு இதுவரை கிடைத்து வந்த நிதி உதவி நின்று போனது.

இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தவணை தடுப்பூசி கூட போடப்படவில்லை அதிர்ச்சி தகவல்கள் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.


ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் அந்த நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று நேட்டோ அமைப்பு பயமுறுத்தி இருக்கிறது.


ரஷ்யா ஐம்பது நாட்களுக்குள் உக்ரைனுடன் போரை நிறுத்தா விட்டால் 

ரஷ்யாவின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை செய்கிறார்.


வரிவிதிப்பை துருப்புச் சீட்டாக வைத்துக் கொண்டு உலக நாடுகளே மிரட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.


தமிழ்நாடு இ பேப்பரின் மூன்றாம் ஆண்டு பயணத்திற்கு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது அதில் பத்திரிகையின் செயல்பாடுகளுக்கு தங்கள் பங்களிப்பை செய்த வாசகர்களின் ஒரு சிலரது புகைப்படத்தை பிரசுரித்து மரியாதை செய்து இருக்கிறது தமிழ்நாடு இ பேப்பர். இதற்காக 30 லட்சம் வாசகர்களின் சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒடிசாவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும், இந்த பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்ததாகவும், அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாணவி தீக் குளித்து உயிரை விட்டு இருக்கிறார்.


இதற்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தால் ஒடிசாவே ஸ்தம்பித்து உள்ளது.


பொதுவாக எல்லா மாநிலங்களிலுமே ஆளும் கட்சியில் செல்வாக்குள்ள நபர்கள் செய்யும் சட்ட விரோத செயல்களுக்கு அரணாக ஆளும் கட்சிகள் நிற்கும் போது தான் இப்படிப்பட்ட போராட்டங்கள் வெடிக்கின்றன. 


2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக ஆட்சியில் பாமகவும்

பங்கு பெறும் என்று அன்புமணி கூறுகிறார். அவரது இந்த பேச்சு எடப்பாடி பழனிசாமியின் ரத்தக் கொதிப்பை எகிற வைக்கும்.

அமித்ஷா ஒருபுறம் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி நடக்கும் என்று அதிமுகவினரை கேட்காமலேயே " பிட் " போட்டுக் கொண்டு இருக்கிறார்.  


" ஒரு பழமொழி சொல்வார்கள்  - ஜமாபந்தி மைக்கூடு என்று ! "


( ஜமாபந்தி நடக்கும் போது

ஒரு இங்க் பாட்டிலை வைத்திருப்பார்கள். அலுவலர்கள் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய பேனா முனையை அதில் முக்கி எடுத்து எழுதிக் கொள்ளலாம் )


அதைப்போல அதிமுகவின் நிலை ஆகிவிட்டது என்று கூறலாம்.


நாங்களும் ஆட்சியில் பங்கு பெறுவோம் என்று அலப்பறை செய்யும் கட்சிகள் எதுவுமே முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்று கூறவில்லை. 


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%