
இன்றைய தினம் தமிழ்நாடு இ
பேப்பரை பார்த்ததும் அதிர்ச்சிக்கு
மேல் மேல் அதிர்ச்சி ஒரே இன்ப
அதிர்ச்சி தான் போங்கள்.
வாசகர்கள் அனைவரையும்
மூன்றாம் ஆண்டு வாழ்த்து மழையில்
நனைய வைத்து விட்டீர்கள்.
வாசகர்களாகிய எங்களை
மதித்து ஊக்கப்படுத்தும் ஒரே
பத்திரிகை தமிழ்நாடு இ பேப்பர்
மட்டும் தான்.
இனி செய்திகளுக்கு வருவோம்
மழைக்கால கூட்டத்தொடரில்
புதிதாக எட்டு மசோதாக்கள்
நிறைவேற்றப்படும். என அறிக்கை
மளிகை சாகுபடியில் மகளிர்
சுய உதவிக் குழுக்கள் அசத்தி
வருகின்றனர். கமல் நாடாளுமன்ற
உறுப்பினராக வரும் 25ஆம் தேதி
பதவி ஏற்கிறார் இனி
நாடாளுமன்றம் களை கட்டும்
என நினைக்கிறேன். ஆறாவது விரல்
இருந்தால் அரசு பணிக்கு தடை
இல்லை என நீதிமன்றம் விளக்கம்
நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்
என பழனிச்சாமி மீண்டும் அறிக்கை
சின்னஞ்சிறு கோபு சிகாகோவில்
இருந்து கொண்டு தினசரி
இ பேப்பரில் கலக்கிக் கொண்டு
வருகிறார் அவரது அயராத
முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில்
இருந்து கைப்பற்றப்பட்ட
இடங்களில்
பூங்காக்கள் அமைக்க நீதிமன்றம்
யோசனை. கர்நாடகாவில்
நீட் தேர்வில் தோல்வியடைந்த ஒரு
மாணவி ரோல்ஸ் ராய்ஸ்
கம்பெனியில் ஆண்டுக்கு 72 லட்சம்
சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது
உக்ரைன் பிரதமர் ராஜினாமா
செய்துள்ளார். காசாவில் உணவுப்
பொருட்கள் வழங்கும் இடத்தில்
கூட்ட நெரிசலில்சிக்கி 19 பேர் பலி
கருப்பு என்பது குறை அல்ல
என்ற கட்டுரை அருமையாக இருந்தது
மூன்றாம் ஆண்டு தொடக்கத்திலேயே
30 லட்சம் வாசகர்களை தாண்டி
புதிய அத்தியாயம் படைத்துள்ளது
தமிழ்நாடு இ பேப்பர். இதற்கு
காரணமான வாசகர்களுக்கும்
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்துக்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?