வாசகர் கடிதம் (*T.P.குமரன்) 17.07.25

வாசகர் கடிதம் (*T.P.குமரன்) 17.07.25


இன்று (17.07.2025) தமிழ்நாடு மின் நாளிதழில் வெற்றிகரமாக 3 ஆண்டு பயணத்தில் உறுதுணையாக இருந்த மலரில் ஒருசிலர் என எனது புகைப்படம் வெளியிட்ட தமிழ்நாடு இ பேப்பர் குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

சிந்திக்க ஒரு நொடி மற்றும் உள்ளூர் செய்திகள் தொகுப்பு மிகவும் அருமை, நலம் தரும் மருத்துவம் பகுதியில் பொடி திமிர்தல் சித்த மருத்துவம் பற்றிய அரிய தகவல்களாகவும், பயன்னுள்ளதாக இருந்தது.

பயணங்கள் முடிவதில்லை பகுதியில் நைமிசாரண்யம் பற்றியும், தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கர்தார் சிங் அவர்களைப் பற்றிய பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

இவ்வாறு தினம் தினம் தமிழ்நாடு இ பேப்பர் மூலம் பல அரிய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன்.

தமிழ்நாடு இ பேப்பர் நடத்தி நானும் தமிழ்நாடு இ பேப்பரும் போட்டியின் வெற்றியாளராக எனது பெயர் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பரிசு அறிவித்த தமிழ்நாடு இ பேப்பர் குழுவினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!!!

ஜோக்ஸ் பகுதியில் நகைச்சுவை அனைத்தும் அருமை. வாங்க சம்பாதிக்கலாம் பகுதியில் பங்கு சந்தை செய்திகள் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டுக்கு 72 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு ரிதுபர்ணாவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழ்நாடு இ பேப்பருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐



நன்றி 🙏

*T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%