வாசகர் கடிதம் (P. கணபதி) 24.07.25

வாசகர் கடிதம் (P. கணபதி) 24.07.25


ஆனந்த பாஸ்கரில் வெளியான த. வெ. க. வின் மாநாட்டுப் பந்தலுக்கான பிரம்மாண்ட அமைப்பு பற்றிய விபரமான தகவல் மலைக்க வைத்தது. வாக்காளர்களைக் கவர்வதற்கான பெரும் முயற்சி. 


அடுத்து தமிழ்நாடு இ இதழில் வெளியான கட்டுரை - நாட்டு சர்க்கரை, பனைவெல்லம் குறித்த ப்ளஸ், மைனஸ் அம்சங்களும், எந்தவகை இனிப்பானாலும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரையும் கவனம் ஈர்ப்பதாக இருந்தது.  


அமெரிக்கா யுனெஸ்கோவிலிருந்து 1984ல் வெளியேறி, 2003ல் உள் நுழைந்து, 2017ல் வெளியேறி, 2023ல் உள் நுழைந்து, மீண்டும் 2025 ல் வெளியேறுவது உலக அரங்கில் வல்லரசு ஒன்றின் சடுகுடு ஆட்டம் என்றே தோன்றுகிறது. 


அமெரிக்கா ஈரானை மீண்டும் தாக்க இருப்பதாகவும், ஐரோப்பா ரஷ்யாவைத் தாக்கும் நோக்கம் கொண்டிருப்பதாகவும் வந்துள்ள செய்திகள் உலக அமைதி குறித்து கவலைகொள்ளச் செய்கிறது. 


முகில் தினகரனின் "எரியுதே, எரியுதே" சிறுகதை முடிவு நல்ல டிவிஸ்ட். "கெடுவான் கேடு நினைப்பான்" என்பதை அழகான கற்பனையில் சிறப்பான சிறுகதையாக வரைந்துள்ளார். 


Tmt. Malliga gopal அவர்களின் லண்டன் பயணக் கட்டுரை அனைத்து முக்கிய இடங்களையும் அழகாக அடையாளம் காட்டியது. இந்தியர்களாகிய நமது மனதில், ஆங்கிலேயர்கள் நமது நாட்டை சூறையாடியதால் ஏற்பட்ட வலியையும், அவர்கள் செய்த சில நற்காரியங்களுக்கான நன்றியுணற்சியை யும் அழகாகப் பதிவு செய்துள்ளார். தேம்ஸ் நதி பற்றி, castle கள் பற்றியெல்லாம் குறிப்பிடும் போது ஷேக்ஸ்பியர் பற்றி ஒரு வரி எதிர்பார்த்தேன். ஆனாலும் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள். 


ஆடி அமாவாஸ்யையின் ஜோதிட ரீதியான விளக்கமும், அது நமது கலாச்சாரத்தில் அழுத்தமாகப் பதியப்பட்டுள்ள விதமும் தெற்றெனப் புரியவைக்கப் பட்டுள்ளது. 


கருமலைத் தமிழாழனின் "உண்மைக் காதல்" கவிதை அருமையான சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அருமை. பாவலர் பாவலர் தான். 


"ஒருவன்" என்ற வே. கல்யாண் குமார் அவர்களின் கவிதை நடையில் கண்ணதாசனின் சாயலைக் காணமுடிகிறது. "ஓடு, தேடு, வாழு" என்ற அவரது மற்றொரு கவிதையும் அறவுரையை சிறந்த சந்தத்துடன் உரைப்பது ரசிக்கத் தக்கது. 


ஓசூர் கவிஞர் பாலாஜி அவர்களின் "உலகத்தை வசப்படுத்து" என்ற படைப்பு சிறந்த உற்சாக பூஸ்ட்டாக சுவைக்க முடிகிறது. 


தமிழ்நாடு இ இதழ் என்னும் தட்டில் பிற கவிதைகளும் சிறந்த பதார்த்தங்களே.


கவிதைப் பக்கங்களில் வெளியாகியுள்ள படங்களின் அழகும் நேர்த்தியும் குழுமத்தாரின் கலா ரசனையையும், கடும் உழைப்பையும் சொல்லாமல் சொல்கின்றன. பாராட்டுக்கள். 


 எண்ணங்களை எடுத்துரைக்க மேடை அமைத்துக் கொடுத்துள்ள தமிழ்நாடு இ இதழ் குழுமத்தாருக்கு நன்றிகள் பல. 


நாளை சந்திப்போம். நன்றி. 



P. கணபதி.

பாளையங்கோட்டை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%