
நாடாளுமன்றம் மூன்றாவது நாளாக
முடங்கியது. புதிய துணை
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க
தேர்தல் ஆணையம் ஏற்பாடு.
மதுரையில் விஜய் மாநாட்டிற்கு
10 லட்சம் பேர் அமரும் வகையில்
ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது
ஆடி அமாவாசை கட்டுரையில்
அதன் பலன்கள் பற்றி விளக்கி
இருப்பது அருமையாக இருந்தது
புதிய உறவு கட்டுரை மூலம்
யாரும் அனாதை இல்லை என்பதை
தெளிவுபடுத்தியது. ஜூலை 29 இல்
நடைபெறும் நாடாளுமன்ற
விவாதத்தில் மோடி பங்கேற்பு.
செந்தில் பாலாஜி தம்பி வெளிநாடு
செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு.
முகில் தினகரனின் அய்யோ எரியுதே
என்ற கட்டுரை அபாரம். இளங்கோ
எழுதிய மனம் ஒரு குரங்கு
என்ற கட்டுரை எதார்த்த நிலையை
உணர வைத்தது. நெல்லை குரலோன்
அவர்கள் எழுதிய மறைக்க முடியுமா
என்ற கவிதை மக்களின்
ஏக்கத்தையும் எதார்த்த நிலையையும்
அதேசமயம் மனதையும் கரைய
வைத்தது. ரிஷி வந்தியா அவர்களின்
கவிதை நறுக்கன்று இருந்தது.
சின்னஞ்சிறுகோபுவின் கற்பனை
கவிதை அபாரமாக உள்ளது.
அந்த காலத்து வழக்கத்தில்
இருந்த நடைமுறைகள் பற்றிய
கட்டுரை நிஜமானது. மருதமலை
கட்டுரையை இதுபோன்று யாரும்
விளக்க முடியாது. பேருந்து கட்டண
உயர்வு இல்லை என்பது மனதுக்கு
ஆறுதலாக இருந்தது.மணக்குள
விநாயகர் கோவில் முழுவதும்
ஏசி வசதி செய்யப்படுவது
பாராட்ட தகுந்தது. யுனெஸ்கோவில்
இருந்து அமெரிக்கா மீண்டும்
வெளியேறியது. அமெரிக்காவின்
அத்தனை செயல்களும்
சிறு பிள்ளைத்தனமாக உள்ளது.
வியட்நாமில் விபா புயல் மூலம்
80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்.
வழக்கம்போல கவிதைகளும்
கட்டுரைகளும் மற்றும் சிறப்பு
செய்திகளும் முந்திக்கொண்டு
தருவதில் தமிழ்நாடு இ பேப்பர்
முன்னிலை வகிக்கிறது.
தெய்வம் இதழ் பக்கத்துக்கு பக்கம்
வித்தியாசமாக அற்புதமாக இருந்தது
பாராட்டுக்கள். உலகையே
தனது 20 பக்கத்தில் அற்புதமாக
கொண்டு வருவதில் தமிழ்நாடு
இ பேப்பர் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர்
அனைவருக்கும் பாராட்டுக்களும்
மகிழ்ச்சியையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?