வாடிப்பட்டியில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில்   அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்


வாடிப்பட்டி, பிப்.14-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் முயலும் திமுக அரசை கண்டித்து வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பாரதிய ஜனதா கட்சி மண்டல் தலைவர் மாயகிருஷ்ணன், தர்மர், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் ஆலயமணி, தெய்வ தர்மர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், செந்தாமரைக் கண் ணன், வழக்கறிஞர் செந்தூர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டைமேடு பாலன் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத் தில் அ.தி.மு.க நிர்வாகிகள் வி.எஸ். பாண்டி, திருப்பதி,சசி, பிரசன்னா, பாலாஜி, பிச்சை, மூர்த்தி, விஸ்வநாதன், பாரதிய ஜனதா கட்சி நகர மண்டல் செயலாளர் தர்மராஜ் பிரச்சார ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் ராமதாஸ் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் குரு பார்த்திபன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%