news Breaking News
clock

வாடிப்பட்டி தாலுகா ஆபிஸ் முன்பு வீட்டு மனை கேட்டு ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டி தாலுகா ஆபிஸ் முன்பு   வீட்டு மனை கேட்டு ஆர்ப்பாட்டம்


வாடிப்பட்டி, பிப்.20-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை மாவட்ட குழு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள ஏழை எளிய ஆதிதிராவிட மற்றும் பிற்படுத்தப்பட்ட வீடு இல்லாத மக்களுக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்ககோரியும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை அதிகப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். தாலுகா குழு உறுப்பினர்கள் சாந்தி சரவணன், புஷ்பவள்ளி நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர்கள் கணேசன், ராஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விளக்கி பேசினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News