news Breaking News
clock

வார ஓய்வு நேரத்தை அதிகரித்திடுக! அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

வார ஓய்வு நேரத்தை அதிகரித்திடுக! அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும். ரயில் ஓட்டுநர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையம் அருகில் 48 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய் அன்று துவங்கியது. உண்ணா விரதப் போராட்டத்திற்கு அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க கோட்டச் செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி டி.ஆர்.இ.யு கோட்டச் செயலாளர் கரிகாலன், கோட்ட தலைவர் சிவக்குமார், துணைப்பொதுச் செயலாளர் ராஜா, ஏ.ஐ.எஸ்.சி.எஸ்டி தென்மண்டல பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, டி.ஆர்.இ.யு.சி.சி.ஆர்.சி கிளை தலைவர் எஸ்.எஸ். கணேசன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News