வார விடுமுறைகளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்: எஸ்.இ.டி.சி அறிவிப்பு

வார விடுமுறைகளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்: எஸ்.இ.டி.சி அறிவிப்பு

சென்னை,


தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


மீலாடி நபி, சுபமுகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 4-ந் தேதி 710 பஸ்களும், 5-ந் தேதி 405 பஸ்களும் மற்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதி 105 பஸ்களும் மாதாவரத்தில் இருந்து 4-ந் தேதி 25 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%