news Breaking News
clock

விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியின் 27 -வது ஆண்டு விளையாட்டு விழா

விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியின் 27 -வது ஆண்டு விளையாட்டு விழா




விருதுநகர், பிப். –


விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 27-வது ஆண்டு விளையாட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் சிறப்பாகத் தொடங்கியது.


கல்லூரியின் செயலாளர் மகேஷ்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரியின் விளையாட்டு ஆண்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குநர் புஷ்பராஜ் சமர்ப்பித்தார். இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் மற்றும் வி.வி.வி. & சன்ஸ் எடிபிள் ஆயில்ஸ் லிமிடெட் நிறுவன இயக்குநர் பாரிமன்னவன் ஆகியோர் தலைமை தாங்கிப் போட்டிகளைத் துவக்கி வைத்தனர்.


அப்போது அவர்கள் பேசுகையில், மாணவர்கள் வளமான எதிர்காலத்தைப் பெறவும், வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளவும் விளையாட்டு மிக முக்கியக் காரணியாக விளங்குவதாகக் குறிப்பிட்டனர். மேலும், மாணவர்கள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தோல்விகளைக் கண்டு சோர்ந்து போகாமல் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.


ஒலிம்பிக் தீபம் ஏற்றம்:


தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கல்லூரிச் செயலாளர் ஆகியோர் தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் கல்லூரிக் கொடிகளை ஏற்றி வைத்தனர். தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்த மாணவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு மாரியாதையும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.


போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் செந்தில், நிர்வாக உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக முதல்வரின் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News