விருத்தாசலத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி (ஹெல்மெட் ) தலைகவசம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விருத்தாசலத்தில், சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி (ஹெல்மெட் ) தலைகவசம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கடலூர், ஜன.22-




சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி,இருசக்கர வாகன விபத்து உயிரிழப்பை தடுக்கும் வகையில், (ஹெல்மெட் ) தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து 


கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் (ஹெல்மெட் ) தலைக்கவசம் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை,டிஎஸ்பி பாலகிருஷ்ணன்,கோட்டாட்சியர் விஷ்ணுப் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்து துவக்கி வைத்தனர்.


விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப் பேரணியில், 500க்கும் மேற்பட்டவர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில்,கடலூர் சாலை,பாலக்கரை சந்திப்பு,கடைவீதி,ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே,தலைக்கவசம் உயிர்க்கவசம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவோம் என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்திய படி,ஆலடி செல்லும் சாலையை சென்றடைந்து, விழிப்புணர்வு பேரணி நிறைவுற்றது. 


இப்பேரணியில், விருத்தாசலம் வட்டார போக்குவரத்து அலுவலர் பெரியசாமி,ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பாக பேரணியை வழி நடத்தினர்.இவ்விழிப்புணர்வு பேரணியில்,வாகன விற்பனை முகவர்கள்,ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள்,பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%