வீட்டு வருமானம், சேவை துறை நிறுவனங்களின் கணக்கெடுப்பின் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தெரியவரும்: மத்திய புள்ளியியல் துறை

வீட்டு வருமானம், சேவை துறை நிறுவனங்களின் கணக்கெடுப்பின் மூலமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தெரியவரும்: மத்திய புள்ளியியல் துறை


  

சென்னை: ‘​நாட்​டின் பொருளாதார வளர்ச்​சியை வெளி உலகுக்கு வெளிப்​படுத்த, தேசிய வீட்டு வருமானம் மற்​றும் ஒருங்​கிணைந்த சேவைத் துறை நிறு​வனங்​களின் வரு​டாந்​திர கணக்​கெடுப்பு மிக முக்​கிய​மானது’ என்று மத்​திய அரசின் புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமைச்​சகத்​தின் பொது இயக்​குநர் தெரி​வித்​தார்.


மத்​திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமலாக்க அமைச்​சகத்​தின் கீழ் உள்ள தேசிய புள்​ளி​யியல் அலு​வல​கம் சார்​பில், தேசிய வீட்டு வருமானம் மற்​றும் ஒருங்​கிணைந்த சேவைத்​துறை நிறு​வனங்​களின் வரு​டாந்​திரக் கணக்​கெடுப்பு குறித்து 2 நாள் பயிலரங்கு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. ​நாட்​டின் பொருளாதார வளர்ச்​சியை வெளி உலகுக்கு வெளிப்​படுத்த, தேசிய வீட்டு வருமானம் மற்​றும் ஒருங்​கிணைந்த சேவைத் துறை நிறு​வனங்​களின் வரு​டாந்​திர கணக்​கெடுப்பு மிக முக்​கிய​மானது’ என்று மத்​திய அரசின் புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமைச்​சகத்​தின் பொது இயக்​குநர் தெரி​வித்​தார்.


மத்​திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமலாக்க அமைச்​சகத்​தின் கீழ் உள்ள தேசிய புள்​ளி​யியல் அலு​வல​கம் சார்​பில், தேசிய வீட்டு வருமானம் மற்​றும் ஒருங்​கிணைந்த சேவைத்​துறை நிறு​வனங்​களின் வரு​டாந்​திரக் கணக்​கெடுப்பு குறித்து 2 நாள் பயிலரங்கு சென்​னை​யில் நேற்று தொடங்​கியது.


இதை மத்​திய புள்​ளி​யியல் மற்​றும் திட்ட அமைச்​சகத்​தின் பொது இயக்​குநர் கீதா சிங் ரத்​தோடு தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது: நாட்​டின் பொருளாதார வளர்ச்​சியை வெளி உலகுக்கு எடுத்​துக்​காட்ட, தேசிய வீட்டு வரு​மான கணக்​கெடுப்பு மற்​றும் ஒருங்​கிணைந்த சேவைத் துறை நிறு​வனங்​களின் வரு​டாந்​திர கணக்​கெடுப்பு மிக முக்​கிய​மானது.


டிஜிட்​டல் முறை​யில் அகில இந்​திய அடிப்​படை​யில் கணக்​கெடுப்​பின் களப்​பணி​யைத் தொடங்​கு​வதற்கு முன் இது ஒரு ஆயத்த பயிற்​சித் திட்​ட​மாகும். ஒவ்​வொரு முறை இந்​திய அளவில் எடுக்​கப்​படும் கணக்​கெடுப்பு நாட்​டுக்கு மிக முக்​கிய​மானது என கவனத்​தில்​கொண்டு சிரத்​தை​யுடன் கணக்​கெடுப்​பவர்​களுக்கு பயிற்சி அளிக்க வேண்​டும்.


அதற்கு இந்த 2 நாள் பயிற்சி பட்​டறை மிக​வும் பயனுள்​ள​தாக அமை​யும். இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​ன​தாக, அமைச்​சகத்​தின் கூடு​தல் பொது இயக்​குநர்​கள் அஜய்​பக் ஷி, சந்​திரமணி சர்​மா, கிஷோர்​கு​மார், சலீல் முகோ​பாத்​தி​யா, சுனிதா உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசினர்.


இதுகுறித்து தேசிய புள்​ளி​யியல் அலு​வலக அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த பயிலரங்​கில் நாடு​முழு​வதும் இருந்து 260 பேர் பங்​கேற்று உள்​ளனர். இவர்​களுக்கு துறை​சார்ந்த நிபுணர்​கள் பயிற்சி வழங்​கு​கின்​றனர்.


பயிற்சி பெற்ற அலு​வலர்​கள் ஒவ்​வொரு மண்​டலங்​களில் உள்ள அலு​வலர்​கள், பணி​யாளர்​களுக்​குப் பயிற்சி அளிப்​பார்​கள். அவர்​கள் கணக்​கெடுப்பு நடத்​து​வார்​கள். இந்த கணக்​கெடுப்பு ஏப்​ரல் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை நடத்​தப்​படும். அதைத் தொடர்ந்​து, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்​களில் முடிவு​கள் வெளி​யிடப்​படும்.


நாடு முழு​வதும் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட இடங்​களில் உள்ள வீடு​களில் வீட்டு வருமானம் தொடர்​பாக​வும், சேவை நிறு​வனங்​கள், சேவை மேற்​கொள்​வோர்​களிடம் வருமானம் தொடர்​பாக​வும் கணக்​கெடுப்பு நடத்​தப்​படும். இதன்​மூலம் உண்மை பொருளாதாரம் வெளி​யுல​குக்​குத் தெரிய வரும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%