news Breaking News
clock

*இராஜா நந்திவர்மன் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட நிறைவு விழா..!*

*இராஜா நந்திவர்மன் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட நிறைவு விழா..!*



வந்தவாசி, பிப் 19:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக, கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இன்றைய சூழலில் மாணவர்கள் சமூக நோக்குடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் இரா.ஏழுமலை, இயக்குநர்கள் டிகேஜி ஆனந்த், அப்பாண்டைராஜ், பா. சுரேஷ் , அருள் முருகன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், பொருளாளர் பழனிச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி ஷா, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News