ஆறுமுகத்திற்கு அந்த ஊரில் நல்ல பெயர். ஆனால் அந்தப் பெயருக்குள் இருக்கும் மனிதனை அவன் வீட்டிலேயே யாரும் அறிந்ததில்லை.
கல்லூரியில் படிக்கும் அவரது இரண்டு மகள்களுக்கும் தங்கள் தந்தை எப்போதும் அமைதியாக... சாதுவாக... பொறுமையின் சிகரமாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
“ஒரு ஆம்பளை இப்படியா இருப்பாங்க?..… அட... ஒரு வார்த்தை கூட சத்தமாய்ப் பேச மாட்டேங்கறாரே...
என்ன ஆளு இவரு?” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.
ஒரு முறை கடையில் ஒருவர் மோசமாகப் பேசிய போது கூட
ஆறுமுகம் தலை குனிந்து வெளியே வந்தார்.
அன்று முதல் "கோழை” என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்து விட்டது.
ஒரு நாள் மாலை, கல்லூரிப் பேருந்திலிருந்து ஆறுமுகத்தின் மகள்கள் இருவரும் இறங்கினர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நால்வரும் அவர்கள் இருவரையும் சூழ்ந்தனர். அசிங்கச் சிரிப்புகள். அருவருப்பான பார்வைகள். லேசாய் மது வாடையும்.
கைகளை நீட்டினர்.
பயத்தில் கண்கள் உறைந்து போயின பெண்களுக்கு.
அப்போது
“ஏய்ய்ய்ய்ய்!” ஒரு இடிக் குரல்.
திரும்பிப் பார்த்தனர்.
ஆறுமுகம்.
கையில் எதுவும் இல்லை. முகத்தில் பயம் இல்லை.
அடுத்த சில நொடிகளில் அங்கு
யாருமே எதிர்பார்க்காத காட்சி அரங்கேறியது.
சிங்கம் பாய்ந்தது போல
ஆறுமுகம் பாய்ந்தார்.
ஒருவன் கீழே விழுந்தான்.
இன்னொருவன் சுவர் மீது மோதினான். மூன்றாவன் ஓட முயன்றான். விழுந்தான்.
நான்காவன் கையைக்
கட்டிக் கொண்டு கதறினான்.
சுற்றி நின்றவர்களுக்கு பேரதிர்ச்சி.
இதுவரை அமைதியாக வாழ்ந்த ஆறுமுகம், இன்று எரிமலையாக மாறியிருந்தான்.
மகள்களின் கண்கள் கலங்கின. பேச நினைத்தும் குரல் வரவில்லை.
ஆறுமுகம் மெல்லத் திரும்பி
சன்னமாய்ச் சொன்னான்
“அம்மா… பொறுமை என்பது பலவீனம் இல்லை. அது எல்லையைத் தாண்டும் போது சிற்றெறும்பு கூட அமைதியாக இருக்காது.... சிங்கமாய் மாறும்"
அன்று முதல் அவர்கள் தங்கள் அப்பாவை பெருமையோடு பார்த்தார்கள், கோழையாய் அல்ல.. ஒரு காப்பாளியாய்.
(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?