news Breaking News
clock

2047-ம் ஆண்டின் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு அடித்தளம் போடும் பட்ஜெட்: மத்திய அைமச்சர் பியூஸ் கோயல் கருத்து

2047-ம் ஆண்டின் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு அடித்தளம் போடும் பட்ஜெட்: மத்திய அைமச்சர் பியூஸ் கோயல் கருத்து


புதுடெல்லி, பிப்.–


மத்திய அரசின் பட்ஜெட், 2047-ம் ஆண்டின் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு அடித்தளம் போடும் பட்ஜெட் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.


மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


இந்த பட்ஜெட் மக்களை அர்ப்பணிப்புடன் பணியாற்ற ஊக்குவிக்கிறது. எதிர்காலத்துக்கு தயாராக இருக்கும் இந்தியாவுக்கான பட்ஜெட். 2047-ம் ஆண்டின் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு அடித்தளம் அமைக்கும் பட்ஜெட்.


இந்த பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


அதிவேக ரெயில்கள், 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு நகரங்களின் மேம்பாடு, உள்நாட்டு நீர்வழி, இளைஞர் மேம்பாடு போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.


செமி கண்டக்டர் 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியது உள்நாட்டு வினியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.


இந்தியா முழுவதும் கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்தும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. கப்பல் கொள்கலன்களை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.


இது இந்திய பொருட்கள் உலகளாவிய சந்தைகளை எளிதாக அடைய உதவும்.


இதுபோல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜவுளித்துறையில் ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


7 அதிவேக ரெயில் தடங்கள், 5 பல்கலைக்கழக நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. எதிர்க்கட்சி கள் எப்படியும் பேசுவார்கள். அவர்களுக்கு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மேம்படுவதில் விருப்பம் இல்லையா?


இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News