Iஏழாச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம்! -ஒன்றிய செயலாளர் திருமூலன் தலைமையில் நடந்தது!

Iஏழாச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் பொதுக் கூட்டம்! -ஒன்றிய செயலாளர் திருமூலன் தலைமையில் நடந்தது!



செய்யாறு, ஜன. 22 -

எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க., சார்பில் ஏழாச்சேரி கிராமத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாள் விழா செய்யா சட்டசபை தொகுதி முழுவதும் அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர். நேற்று ஏழாச்சேரிஞ்ச கிராமத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூலன் ( எ ) பையாகுட்டி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அ.தி.மு.க.,வின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர். அமைப்பு சாரா ஓட்டுநர் ரகு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஏழாச்சேரி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் குருமுருகன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாற்று கட்சியில் இருந்து அ.தி.மு.க.,வில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து வரவேற்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என, தொண்டர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%