tamilnadu epaper

அம்மாவின் அன்பு

அம்மாவின் அன்பு


ரமாவின் அம்மா அதிகம் படித்தவள் இல்லை. ஆனால் ஆய கலைகள் அறிந்தவர்.


திருமணம் முடிந்த பத்தாவது மாதமே ரமா பிறந்தாள்.

அதற்குப்பின் அவளுக்கு மகவு ஒன்றுமில்லை. அந்தக் காலத்தில் பத்து குழந்தைகள் பெற்றெடுக்கும் சமயம்.

அவர்கள் இந்தப் பெண்ணை சீரும் சிறப்புமாக வளர்த்தனர்.

மிக நன்றாக படிக்க வைத்தனர்.

அந்தப் பெண்ணும் நன்றாக படித்தாள்.

பாட்டு, கை வேலை, சமையல் எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தாள். பார்ப்பதற்கு அழகான பதுமை போல் இருந்தாள்.


அவளின் படிப்புக்கேற்ப பெரிய கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டி பதிவு செய்தனர்.


ஆனால் அவர்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை கட்டுவதற்கு 

தயாராக இருந்தார்கள்.


ஆனால் உள்ளிருந்த பிரச்னையால் இந்தப் பெண்ணிற்கு சீட் தர மறுத்து விட்டார்கள்.


பெண்ணை நிச்சயம் அந்தக் கல்லூரியில் சேர்த்தே தீருவேன் என்ற வைராக்கியத்துடன் ரமாவின் தாயார் நடையாய் நடந்தார்கள்.


கல்லூரி நிர்வாகம் சரியாக காரணம் சொல்லவேயில்லை.தங்களின் இஷ்டம் சீட் கொடுப்பது என்று வாதிட்டார்களே தவிர சீட் கொடுக்க மறுத்து விட்டார்கள்.

இன்னும் இரண்டு பெண்களுக்கும் இதே போல் காரணம் இல்லாமல் நிராகரித்தார்கள். 


பெண்கள் பள்ளி இறுதி படிப்பு போவது அந்தக் காலத்தில் மிகுந்த சிரமம்.

இவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர அனுமதி கிடைக்க வில்லை. சரியான காரணமும் கல்லூரி நிர்வாகம் சொல்லவில்லை.


மகளின் நலம் வேண்டி ரமாவின் தாயார் கல்லூரி முன்பு உண்ணாவிரதம் இருந்து வந்தார் . கல்லூரி நிர்வாகம் முதல் மூன்று நாட்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.

அதற்குப் பின் அப்போதிருந்த நாளிதழ் ஒன்றில் சிறிய செய்தியாக வந்தவுடன் மக்களுக்கு தெரியத் தொடங்கியது. அப்போதும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தனர். ஐந்தாவது நாள் தான் அரசின் பார்வைக்குப் போன பிறகு கொஞ்சம் அச்சம் கொண்டனர். ஆனாலும் ஆறாவது நாள் மூவருக்கும் கல்லூரியில் இடம் கொடுக்க அரசாங்கம் பரிந்துரைத்தது . இவர்களுக்கு அங்கு படித்து முடிக்கும் வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவு போட்டது.


ரமா தாயின் முயற்சியால் மிகவும் நன்கு படித்து அந்தக் கல்லூரியின் முதல்வரானார்.



-ஹேமா வாசுதேவன்

சென்னை