tamilnadu epaper

சகோதரர்களை வாழ்த்துவோம்

சகோதரர்களை வாழ்த்துவோம்


(தேசிய சகோதரர்கள்

                     நாள்)


பிணைப்பை

  வலுப்படுத்த

    பீடுடன்

      வாழ

இணைப்பை

    வழிப்படுத்த

      இன்பம்...

        அணைக்க

தனித்துவம்

   கொண்டே

      *சகோதரர்*

           *நாளைக்*

கனிவுடன்

    காணல்

      கனி!


வாழ்வு

  வளம்பெற

    வண்ணமே

      சூழ்ந்திட

தாழ்வு

  மனப்பான்மை

     தாங்கிட.....

       ஆழ்ந்த

வழிகாட்டல்

  செய்திட

     வல்லநல்

       அன்பில்

ஒழுகும்

   *சகோதரரை*

        ஓர்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.