காலத்தே பொழியும் மழை விவசாயிக்கு
மகிழ்ச்சி.... !
எப்போதோ பொழியும்
ஆலங்கட்டி மழை...
குழந்தைகளை குதுகளிக்க வைக்கும் !
சாரல் மழை...
காதலைர்களை
ஒரு குடையின் கீழ் பயணிக்க வைக்கும் !
வாகன ஓட்டிகளை
தளர வைக்கும்...
பெரும் மழை....
குடிசை வீடுகளையும் இரக்கமின்றி இழுத்துச் செல்லும்.... !
தூறல் விட்டு பெய்யும் மழை...
சூடான தேநீர் கடைக்கு வாடிக்கையாளர்களை. கவர்ந்திழுக்கும்..
மொத்ததில்...
மழை....
இறைவன் தந்த கொடை...
எம்.பி.தினேஷ்.
கோவை