டெல்லியில் சோனியா ராகுலுடன்
முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.
ஒருவேளை கூட்டணி பற்றி
இருக்குமோ. நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல்
மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை
தண்டனை விதிக்கப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி
பெண் youtuber பாகிஸ்தானுக்கு
தகவல். ஒரு பெண் youtuber
தகவல் சொல்லும் அளவுக்கு
நம் உளவுத்துறை பின்தங்கியுள்ளது
வெட்கக்கேடானது. திமுக வினருக்கு
கப்பம் கட்டினால் தான் தொழில்
நடத்த முடியும் அண்ணாமலை
அறிக்கை. இதுவரை அண்ணாமலை
கோமாவில் இருந்தாரா.
வேலூர் முத்து ஆனந்த் அவர்களின்
காதல் கவிதை ஒரு காவியம்
இவருக்கு காதல் கவி அரசன்
என்ற விருதை வழங்கலாம்
பசு எருமை வித்தியாசம் பற்றிய
கட்டுரை வித்தியாசமாக இருந்தது
இந்திய விமானம் வான்வெளியில்
கோளாறு ஏற்பட்டதால் பாகிஸ்தானில்
தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது
திருப்பதியில் ஒரு வேன் டிரைவர்
மண்டபத்தில் தொழுகை நடத்தினார்
இதில் தவறு இருப்பதாக
தெரியவில்லை. இந்தியா
பாகிஸ்தான் போருக்கும்
அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும்
இல்லை. பாகிஸ்தான்
பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை
சிந்து நதி நீர் வழங்கப்படாது
என இந்தியா அறிவிப்பு.
கேமரா முன்பாக பேட்டி
கொடுக்கும்போது உங்கள் ரத்தம்
ஏன் கொதிக்கிறது என்று மோடியை
பார்த்து ராகுல் கேட்டு இருக்கிறார்
அவர் என்றைக்கு பேட்டி கொடுத்தார்
இந்தியாவுடன் வர்த்தக உறவு
வைத்துக் கொள்ள பாகிஸ்தான்
விரும்புகிறது. உலகில் எந்த
மூலையில் இருந்தும் அணு ஆயுத
தாக்கல் நடத்த முடியும் என
அமெரிக்கா அணு ஆயுத சோதனை
நடத்தியுள்ளது. சீனாவில் 650
ஆண்டுகால பழமையான கோபுரம்
இடிந்து விழுந்து உள்ளது.
விதவிதமான கட்டுரைகள்
கவிதைகள் துணுக்கு செய்திகள்
உள்ளூர் செய்திகள் உலக செய்திகள்
என தினசரி களை கட்டி வருவது
சிறப்பு அம்சமாகும்
28 லட்சம் வாசகர் கடிதங்கள்
கவிதைகள் துணுக்குகள்
இவற்றைப் பரிசீலனை செய்து
பத்திரிகையாக வெளிவருவது
அசாத்திய திறமையாகும்.
இ பேப்பர் குடும்பத்துக்கு
வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி