tamilnadu epaper

யார் அந்த விஐபி ?

யார் அந்த விஐபி ?


ஒரு மாத விடுமுறைக்குப் பிறகு

வருகை தரும் விஐபிக்காக

வீடே பரபரப்பானது

அம்மா அடுக்களையில் சுறுசுறுப்பானாள்

அப்பா தாடியை ட்ரிம் செய்து

தலைக்கு டை அடித்துக் கொண்டார்

அண்ணா தனது அழுக்கு

ஜீன்சுக்கு விடுதலை கொடுத்தான்

அக்கா மேக்கப் கிட் மூலம்

தனது முகத்தை பொலிவாக்கினாள்

தம்பி தெருவில் வம்பிழுக்காமல்

வீட்டிலேயே செட்டிலானான்

தங்கை பாப்பா அழுகையை

நிறுத்தி ஆனந்தித்தாள்

நானோ வாசற்படியை நோக்கி

காத்திருந்தேன்

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த

அந்த விஐபி, மாஸ் என்ட்ரி கொடுத்தார்

அது வேறு யாருமல்ல

எங்கள் வீட்டு வேலைக்காரம்மாள்

மங்கம்மாதான் !



ஆர். ஹரிகோபி,

புது டெல்லி